சந்திரலேகா சீரியலில் ரிப்போர்ட்டராக கலக்குவது "ஆழ்வார்" அஜீத்தின் "தங்கச்சி"யாம்!
சன் டிவி சீரியலில் பரபரப்பான ரிப்போர்ட்டராக கலக்கி வரும் ஸ்வேதா தல அஜீத்தின் தங்கையாம். நிஜத்தில் அல்ல ஆழ்வார் படத்தில் அறிமுகமானதால் ‘தல' சிஸ்டர் என்கிறார்.
தொடர்ந்து வள்ளுவன் வாசுகி, இதயம் திரையரங்கம், கூட்டாச்சோறு படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், சன் டிவி சீரியலின் சந்திரலேகா சீரியல்தான் மக்களிடம் பிரபலப்படுத்தியிருக்கிறது.

நான்தான் பாலா
விவேக் ஜோடியாக நான்தான் பாலா படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்வேதா திடீரென்று சீரியல் ஹீரோயினாகிவிட்டார்.

டூ பீஸ் சீன் இருக்காதே
சினிமாவை விட்டு ஏன் சீரியல் என்றால் இங்குதான் டூ பீஸ் போடச் சொல்லமாட்டாங்க என்கிறார் ஸ்வேதா.

படிப்பாளி நடிகை
பிடெக் ஐ.டி, எம்.பி.ஏ என படிப்பாளி பொண்ணாக இருந்தாலும், மாடலிங், நடிப்பு என பிஸியாகிவிட்டார். காரணம் இதுதான் பிடித்த லைன் என்கிறார்.

பேய் படம்
மாதத்தில் பாதிநாள் ஷூட்டிங். மீதமுள்ள நேரத்தில் பேய் படம் பார்க்கிறாராம்.

வாய்ப்பு கேட்டேன்
சீரியலில் நடித்தாலும் சினிமா வாய்ப்பும் தேடுகிறேன். இயக்குநர்களை நானே அணுகுவதில் என்ன தப்பு என்கிறார் இந்த வாய் உள்ள புள்ளை. தமிழ் மீடியாவுல நல்லா பொழைச்சுக்குவீங்க சுவேதா.


Click it and Unblock the Notifications