»   »  வில்லியாக நடிக்க ஆசைப்படும் குலதெய்வம் அலமு

வில்லியாக நடிக்க ஆசைப்படும் குலதெய்வம் அலமு

Posted by:
Subscribe to Oneindia Tamil

நாதஸ்வரம், குலதெய்வம் தொடர்களின் கதாநாயகி ஸ்ரித்திகாவிற்கும் ஒரு ஆசை வந்திருக்கிறது அதாங்க வில்லியாக நடிக்க வேண்டும் என்பதுதான். அந்த முக பாவனை... சும்மா டெரர் ஆக இருக்கும் என்றும் அதேபோல தானும் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் ஸ்ரித்திகா.

அது ஏன்தான் சீரியல் ஹீரோயின்கள் எல்லாருக்கும் வில்லியாக நடிக்க ஆசைப்படுறாங்களோ தெரியலையே... ஹீரோயின்களை விட வில்லிகளுக்குத்தான் ரசிகைகளும் அதிகம் இருக்கின்றனர். வள்ளியை விட இந்திர சேனாவிற்குத்தான் அதிகம் வரவேற்பு இருக்கிறது. அதேபோல தெய்வமகள் சத்யாவை விட காயத்ரியின் நடிப்பை விரும்புபவர்கள்தான் அதிகம் இருக்கின்றனர். அதனால்தானோ என்னவோ ஏராளமான நடிகைகள் ஒரு சீரியலிலாவது வில்லியாக நடிக்கவேண்டும் என்று பேட்டியில் தெரிவிக்கின்றனர்.

சன் டிவியின் சூரியவணக்கம் நிகழ்ச்சியின் விருந்தினர் பக்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரித்திகா, மலேசியாவில் இருந்து தமிழகம் வந்து சினிமா, சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்று தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

நான் மலர் ஆனது எப்படி

ப்ளஸ் டூ முடித்துவிட்டு விளம்பரம், சினிமாவில் நடித்த தனக்கு சீரியல் வாய்ப்பு வந்தது என்றும், சன்டிவி ப்ரைம் டைம் சீரியல், மெட்டி ஒலி இயக்குநர் என்பதால் நடிக்க ஒத்துக்கொண்டேன் என்று கூறினார். என்னுடைய உண்மையான பெயரை விட மலர் என்ற பெயர்தான் தற்போது நிலைத்துவிட்டது என்றார் ஸ்ரித்திகா.

தனுஷ் அம்மாவின் பாராட்டு

தனுஷ் தங்கையாக நடித்த போது, படப்பிடிப்பிற்கு வந்த அவரது அம்மா தன்னை நேரில் அழைத்து பாராட்டியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த அளவிற்கு 5 ஆண்டுகள் பிரபலமான சீரியலாக நாதஸ்வரம் அமைந்து விட்டது.

குலதெய்வம் அலமு

நாதஸ்வரம் சீரியல் போலவே குலதெய்வம் தொடரிலும் ஒரு போல்டான கதாபாத்திரம் தனக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரும் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த சீரியலாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஸ்ரித்திகா.

வில்லியாக நடிக்கணும்

ஹீரோயினாக நடிப்பது ஒருபுறம் பிடித்திருந்தாலும் வில்லியாக நடிக்கவேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை. அந்த முக பாவனை எனக்கு வருமா தெரியலை... ஆனாலும் ஒரு ஆசைதான் என்றார் ஸ்ரித்திகா.
வேண்டாம் மலர்... உங்களுக்கு அதெல்லாம் செட் ஆகாது.

English summary
Kuladeivam heroine Alamu is willing to act as a villi in a serial
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos