twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன நடக்குமோ...7 பெண்களின் உயிர்ப் பலி... பதற வைக்கும் “ஏழாம் உயிர்”!

    |

    சென்னை: டிவி சேனல்களைப் பொறுத்த வரையில் குடும்ப வன்முறைகளை மட்டுமே சீரியல்களாக பார்த்து பூத்துப் போன கண்களுக்கு சில நேரங்களில் வித்தியாசமான, அடுத்து என்ன நடக்கும் என்பது போன்ற சீரியல்களும் அரிதாக காணக் கிடைக்கும்.

    அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்துள்ளது வேந்தர் டிவியில் ஒளிப்பரப்பாகும் "ஏழாம் உயிர்". விறுவிறுப்பான கதைக்களம், அமானுஷ்யம் சூழ்ந்த இடங்கள், நிகழ்வுகள் என பார்க்கும் அனைவரையும் நகம் கடிக்க வைத்துள்ளது இந்த சீரியல்.

    7 பெண்களையும், அவர்களுடைய உயிர் சார்ந்த பலிகளையும் சார்ந்து இயங்கும் ஒரு கதையில், தற்போது சூடு பிடித்துள்ள காட்சிகள் அரங்கேற ஆரம்பித்துள்ளன.

    பரபரக்கும் திரைக்கதை:

    பரபரக்கும் திரைக்கதை:

    தொடக்கமாக ஒலிக்கும் பாடலும், அதில் காட்சியாக விரியும் அந்த 7 சிலைகளுமே நம்மை விறுவிறுப்பின் உச்சிக்கு கொண்டு செல்கின்றன. மர்மத்தின் முடிச்சு துளிக் கூட அவிழாத வகையில் அருமையாக திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இதன் இயக்குனர் அழகர்.

    சுற்றிச் சுழலும் மர்மங்கள்:

    சுற்றிச் சுழலும் மர்மங்கள்:

    வெளிநாட்டில் இருந்து சிலைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக வருகிறார் கதாநாயகி ப்ரியதர்ஷினி. அவருக்கு உதவும் அவருடைய தோழர் விக்கி. சாதாரணமாக சிலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய முயலும் ப்ரியாவினைச் சுற்றி, அசாதாரணமான செயல்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

    கையில் கிடைக்கும் சிலை:

    கையில் கிடைக்கும் சிலை:

    அவருக்கு உதவும் வகையில் எதிர்பாராமல் ஒரு வித்தியாசமான சிலையும் அவரது கைக்கு கிடைக்கின்றது. அதனைத் தொடரும் கிளைச் சம்பவங்களாக தொடர்ச்சியாக அமாவாசைகள் அன்று 4 பெண்களின் மரணங்கள். அதற்கு காரணம் ஒரு சடாமுடி மனிதரும், மந்த்ரா என்கின்ற அமானுஷ்ய பெண்ணும்தான்.

    7 பெண்களின் உயிர்:

    7 பெண்களின் உயிர்:

    மந்த்ராவை ஒவ்வொரு பலியின் முடிவிலும் ப்ரியா கண்டறிந்து கொள்கிறாள். இந்த நிலையில் அந்த பலியாகும் பெண்கள் வரிசையில் ப்ரியாவும்
    இருப்பது அவருக்கு தெரிய வருகின்றது. தன்னுடைய பிறந்தநாளையும், சிலை குறித்த மர்மங்களையும் அறிந்து கொள்ள விழைகிறாள்.

    மிஞ்சுவது 3 மரணங்கள்தான்:

    மிஞ்சுவது 3 மரணங்கள்தான்:

    கடைசியாக தற்போது மிஞ்சி இருப்பது மூன்றே மரணங்கள். அதில் தன்னையும் காத்துக் கொண்டு, அந்த 2 பெண்களையும் ப்ரியா காப்பாற்றுவாளா என்று ரசிகர்களை எதிர்பார்ப்பில் தள்ளியுள்ளது இந்த சீரியல்.

    மெனக்கெடல்கள் அதிகம்:

    மெனக்கெடல்கள் அதிகம்:

    சீரியலில் தொடக்கத்தில் வருகின்ற மந்திர உச்சாடனம், வித்தியாசமான வடிவமுடைய 7 சிலைகள், மர்ம சடாமுடி மனிதர், காபாலிகர்கள், கனியான்கள், அகோரிகள், அந்த வித்தியாசமான சிலை, பின்னணி இசை, இடங்கள், நிகழ்வுகள் என ஒவ்வொரு விஷயத்திற்கும் மெனக்கெட்டுள்ளனர் குழுவினர்.

    சூசன் அபாரம்:

    சூசன் அபாரம்:

    மந்த்ராவாக நடிக்கும் சூசனும், ப்ரியாவாக நடிக்கும் லஷ்மியும் தங்களது நடிப்பினை அருமையாக வெளிப்படுத்தி வருகின்றனர். அனைத்து நடிகர்களுமே அவர்களுடைய கதாப்பாத்திரத்தினை செவ்வனே செய்துள்ளனர்.

    வெயிட் பண்ணுங்க பாஸ்:

    வெயிட் பண்ணுங்க பாஸ்:

    கிட்டதட்ட இறுதிக் கட்டத்தினை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தற்போது ஒவ்வொரு மர்ம முடிச்சாக அவிழ ஆரம்பித்துள்ளது. அந்த சடாமுடி மனிதர் யார், எதற்காக 7 பெண்களை பலி கொடுக்கின்றார், ப்ரியாவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம், அந்த சிலையின் பின்னணி, இந்த பலிகளின் பின்னணி இதையெல்லாம் தெரிந்து கொள்ள இன்னும் கொஞ்ச நாட்கள் நீங்கள் சோபா நுனியில் அமர்ந்தே ஆகவேண்டும் வேறு வழியே இல்லை!

    English summary
    7 aam uyir a soap opera in Vendhar Tv running with weird scenec and freez the people's eyes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X