அடடா... இனிமேல் தேவயானி மூக்கும், முகமும் விடைக்க பேசமாட்டாரா...??

By Sudha

முத்தாரம் டிவி சீரியலில் இன்று ஒரு திடீர் திருப்பம்... உதவி போலீஸ் கமிஷனராக நடித்து வந்த தேவயானிக்குப் பதில் விஜயலட்சுமி திடீரென என்ட்ரி கொடுத்துள்ளார். இனி இவருக்குப் பதில் இவர் என்றும் கார்டு போட்டு விட்டனர்.

முத்தாரம் டிவி தொடரில் தேவயானி இரு வேடங்களில் இதுவரை நடித்து வந்தார். அதில் ஒரு கேரக்டர் பெயர் ரஞ்சனி. இன்னொரு கேரக்டர் சிவரஞ்சனி.

இதில் உதவி போலீஸ் கமிஷனர் பாத்திரம்தான் ரஞ்சனி. அதிரடியாக செயல்பட்டு , அதிரிபுதிரியாக வசனம் பேசி கலக்கி கொண்டிருந்தார் தேவயானி. இந்த நிலையில் திடீரென இன்று இந்த கேரக்டருக்குள் விஜயலட்சுமியை திணித்து விட்டனர்.

நாட்டு நடப்பை மிக்ஸியில் அடித்து

நாட்டு நடப்பை மிக்ஸியில் அடித்து

முத்தாரம் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு காட்சியையும் நாட்டு நடப்பைப் பார்த்து அதை மிக்ஸ்செய்து மிக்ஸியில் அடித்து காட்சிப்படுத்தி வருகின்றனர்.

முன்பு கட்டாயக் கல்யாணம்

முன்பு கட்டாயக் கல்யாணம்

முன்பு கட்டாயக் கல்யாணத்தை வைத்து சில காட்சிகளை சுட்டனர். அதாவது அரசியல்வாதிகளும், பெரும் பணக்காரர்களும் தங்களது சக்தியை வலுப்படுத்த கன்னி கழியாத சிறுமிகளைக் கல்யாணம் செய்வார்களே.. அதை சுட்டு சீனாக்கினர்.

லேட்டஸ்ட் ரகளை .. கேங் ரேப்

லேட்டஸ்ட் ரகளை .. கேங் ரேப்

அந்த வரிசையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த கேங் ரேப்பை சுட்டு காட்சிப்படுத்தினர்.

ரஞ்சனியின் நாத்தனார்

ரஞ்சனியின் நாத்தனார்

ரஞ்சனியாக வந்த தேவயானியின் நாத்தனாரை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாக அந்தக் காட்சி வந்தது.

என்கவுண்டர்...தேவயானி சேஞ்ச்...

என்கவுண்டர்...தேவயானி சேஞ்ச்...

இன்று ஒரு என்கவுண்டர் காட்சியை காட்டினர். அதாவது கேங் ரேப்பில் ஈடுபட்டு கைதான அரசியல்வாதியின் மகன் உள்ளிட்ட கும்பல் தனது பலத்தை பயன்படுத்தி வெளியே வந்து விடுவதாகவும், அவர்கள் ரஞ்சனியிடம் சவடால் பேசுவதாகவும், கொதிப்படைந்த ரஞ்சனி துப்பாக்கியை தூக்கி டொப்பு டொப்பு என்று சுட்டுத் தள்ளுவதாகவும் சீன்.

சுட்டவர் ரஞ்சனிதான்.. ஆனால் தேவயானி இல்லை

சுட்டவர் ரஞ்சனிதான்.. ஆனால் தேவயானி இல்லை

இந்த காட்சியில் தேவயானிக்குப் பதில் நடிகை விஜயலட்சுமி தோன்றுகிறார். மேலும் இனி இவருக்குப் பதில் இவர் என்றும் கார்டும் போட்டனர். இதன் மூலம் ரஞ்சனி கேரக்டரில் இனி விஜயலட்சுமி நடிக்கப் போகிறாராம்....

அடடா... தேவயானி மூக்கும், முகமும் விடைக்க விடைக்கப் பேசும் வசனத்தை கேட்க முடியாமல் போயிருச்சே...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X