»   »  நீ எப்படி செக்ஸ் வச்சுக்குவ: இளம்பெண்ணை பார்த்து கேட்ட நடிகை கீதா

நீ எப்படி செக்ஸ் வச்சுக்குவ: இளம்பெண்ணை பார்த்து கேட்ட நடிகை கீதா

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஓரினச்சேர்க்கையாளரான இளம்பெண்ணிடம் நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என நடிகை கீதா கேட்டு ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

ஜீ தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் நடிகை கீதா பதுக்கு ஜதகா பன்டி என்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சனைகளை கேட்டு பின்னர் மனோதத்துவ நிபுணர்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளரான 20 வயது மற்றும் 23 வயது பெண்கள் கலந்து கொண்டனர். 23 வயது பெண் தன்னை ஆணாக உணர்வதால் அவ்வாறே உடை அணிகிறார்.

நடக்குமா

தன்னை ஆணாக உணரும் பெண்ணை பார்த்து கீதா கூறுகையில், ஒரு ஆண் போன்று நினைத்துக் கொண்டு இந்த பெண்ணை வீட்டில் இருந்து அழைத்து சென்றுவிட்டாய். யாராவது ரவுடிகள் பெண்களாகிய உங்களை தாக்கினால் என்ன செய்வீர்கள். ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்கிறார்கள். ஆனால் இது சாத்தியம் என்று நினைக்கிறாயா? என கேட்டார்.

இந்தியா

ஓரினச்சேர்க்கை எல்லாம் வெளிநாட்டு கலாச்சாரம். அங்கிருந்து நம் நாட்டிற்கு வந்துள்ளது. அதை இந்தியாவில் பின்பற்றக் கூடாது என்று கூறிய கீதா ஆண் போன்று உடை அணிந்திருந்த பெண்ணை கிண்டல் செய்தார்.

செக்ஸ்

20 வயது இளம்பெண்ணை பார்த்து கீதா கூறுகையில், நீங்கள் பெண்கள் இருவரும் திருமணம் செய்தால் எப்படி செக்ஸ் வைத்துக் கொள்வாய்? அது சாத்தியம் அல்ல என்றார்.

திருமணம்

20 வயது பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய கீதா, உங்கள் மகளுக்கு நல்ல பையனாக பார்த்து திருமணம் செய்து வையுங்கள். அது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார்.

கண்டனம்

ஓரினச்சேர்க்கையாளர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்த கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Actress Geetha asked a young girl who wishes to marry a trans-man as to how would she have sex with her(him).
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos