எல்லோருக்கும் பிடிச்ச நல்ல மாமியார் நான்… நடிகை யுவராணி
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் மாமியார் தேவை தொடரில் அழகாக மாமியராக வருகிறார் யுவராணி. அதற்கும் மாமியார் புரமோசனா? என்று கேட்டால் சிரிக்கிறார் யுவராணி.
சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்கள் எல்லாம் சின்னத்திரையில் கதாநாயகிகளாகத்தான் பெரும்பாலும் வலம் வருகின்றனர். ராதிகா இன்னமும் சீரியல் கதாநாயகிதான். ஆனால் சீரியலில் வில்லியாக அறிமுகமானதாலோ என்னவோ கதாநாயகி பாத்திரம் யுவராணிக்கு சிக்கவே இல்லை.
இப்போது புது சீரியலில் மாமியாராகிவிட்டார். எப்படி இந்த மாற்றம் என்று கேட்டால் அழகாக சிரிக்கிறார் யுவராணி. தன்னுடைய சின்னத்திரை, சினிமா பயணங்களைப் பற்றி கூறுவதைக் கேளுங்களேன்.

சித்தியில் வில்லியானேன்…
''22 வருஷமா பெரியதிரை, சின்னத்திரைன்னு நடிச்சுகிட்டு இருக்கேன். 'சித்தி' மெகா தொடர் 'பிரபாவதி' கதா பாத்திரம், இப்பவும் ரசிகர்கள் மனசுல என்னை வெச்சுருக்கு. அதற்குக் காத்திரம் அந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.

தென்றலில் ஆபிசர்
தென்றல் தொடரில் கணவரால் கைவிடப்பட்ட வங்கி அதிகாரியாக வருவேன். அந்த கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.

நல்ல மாமியார் நான்
ஆரம்பத்தில் மாமியாரா நடிக்கணுமானு தோணுச்சுதான். ஆனா, கதையைக் கேட்டதுக்கு அப்புறம் நிச்சயமா விடக்கூடாதுனு தலையாட்டிட்டேன். தற்போதைய சூழல்ல ஒரு பெண் தனியே எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகளை அலசி தீர்வு சொல்லும் கதாபாத்திரம். நல்ல மாமியாராக நடிக்கிறேன்.

மறுபடியும் வில்லி
என்னை சீக்கிரமே மறுபடியும் பரபரப்பான வில்லியா பார்க்கப்போறீங்க. ஜெயா டி.வி-யில விரைவில் ஒளிபரப்பாகப் போகிற 'தாய் வீடு' தொடர்ல, எல்லாரும் திட்டித் தீர்க்கிற எதிர்மறையான கதாபாத்திரம்!'

அம்மா பசங்க எனக்கு
''கணவர் ரவீந்திரா, ஸ்பா அண்ட் பியூட்டி பார்லர் துறையில இருக்காங்க. ரெண்டு பசங்க. பெரியவன் விஷ்ணு, சின்னவன் நித்யன். பயங்கர வாலு பசங்க. நானும் என் மாமியாரும்தான் அவங்களை கவனிச்சுக்குவோம். ஷூட் இருந்தா பாட்டி பசங்க, ஷூட் இல்லைனா அம்மா பசங்க என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்பினார் யுவராணி.


Click it and Unblock the Notifications











