twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயா தொலைக்காட்சியில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் படம் விடுதலை!

    By Shankar
    |

    சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பை எதிர்ப்பார்த்து முதல்வர் ஜெயலலிதா காத்துக் கொண்டிருக்கும் வேளையில், ஜெயா டிவியில் சென்ட்டிமென்டாக ரஜினிகாந்த் - சிவாஜி கணேசன் நடித்த விடுதலை படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    18 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புதான், முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையையே நிர்ணயிக்கப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    movie

    பெங்களூரில் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. நாடு முழுவதிலுமிருந்து 600-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் இந்த நிகழ்வுகளையெல்லாம் எழுத - படமாக்க அங்கே காத்துக் கொண்டிருக்கிறார்கள். 60 சேனல்களில் லைவாக ஓடி்க் கொண்டிருக்கிறது ஜெயலலிதா தீர்ப்பு விவகாரம்.

    ஆனால் ஜெயலலிதாவின் பெயரில் இயங்கும், அவரது ஜெயா தொலைக்காட்சியோ இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. சென்ட்டிமென்டாக விடுதலை படத்தை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், மாதவி, விஷ்ணுவர்தன் நடித்த படம் விடுதலை. கே விஜயன் இயக்கத்தில், கே பாலாஜி தயாரிப்பில் 1986-ல் வெளியானது.

    English summary
    While the whole country is waiting for Jayalalithaa's asset case judgement, Jaya TV is sentimentally telecasting Rajinikanth starrer Viduthalai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X