சூர்ய புத்ரி தொடரில் எதிர்பாராத திருப்பங்கள்

By Mayura Akilan

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூரிய புத்ரி மெகா தொடர், புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பில் 300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது.

வலுவான கதை அம்சமும், எதிர்பாராத திருப்பங்களும், பொருத்தமான காட்சி அமைப்புமே தொடரை ரசிக்க காரணிகளாக இருக்கிறது என்கிறார் தொடரின் கிரியேட்டிவ் ஹெட் குட்டி பத்மினி.

மனைவியும், மகன்களும் ஒதுக்க யாருமின்றி தவிக்கும் ராம் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும். ராமின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் கிருஷ்ணாவின் திட்டம் பலித்ததா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் காணலாம் என்கிறார் குட்டி பத்மினி.

மனைவியின் பாராமுகம்

மனைவியின் பாராமுகம்

குடும்பத்தைப் பிரிந்து சிறையில் பல இன்னல்களை அனுபவித்த ராம் விடுதலையாகி வீடு திரும்பிய போது இரண்டு மகன்களும் வெறுத்து ஒதுக்குகிறார்கள். ராமின் ஆசை மனைவி பாரதியும் நமக்குள் எந்த உறவும் இல்லையென்று தீர்மானமாக கூறி விட்டார்.

கிருஷ்ணாவின் திட்டம்

கிருஷ்ணாவின் திட்டம்

வீட்டில் ஒரு நடைப்பிணமாக ராம் வாழ்ந்து கொண்டு இருக்க, முழுமையாக அந்த குடும்பத்தை அழிக்க வேண்டுமென்று ராமின் மருமகள் கிருஷ்ணா திட்டமிடுகிறாள்.

அர்ஜூன்– ஜோதி காதல்

அர்ஜூன்– ஜோதி காதல்

அர்ஜூன்-ஜோதியின் காதலை பிரித்து, பிரியாவை ஜோதியாக ஆள் மாறாட்டம் செய்து, அர்ஜூனுக்கு மணம் முடிக்க முயற்சிக்கிறாள், கிருஷ்ணா.

அஸ்வின் மிரட்டல்

அஸ்வின் மிரட்டல்

அர்ஜூனின் காதலை முறிக்க அஸ்வினினுடன் திட்டம் போடுகிறாள் கிருஷ்ணா ஆனால் அதற்கு கூலியாக அவளிடம் முத்தம் கேட்கிறான் அஸ்வின். அதற்கு ஒத்துக் கொண்டவளாக திட்டத்தை கேட்கிறாள் கிருஷ்ணா.

ராமின் நிலை என்ன?

ராமின் நிலை என்ன?

ராமை வீட்டை விட்டு வெளியேற்ற அவனுடைய சொந்த மகன்களையே கருவியாக பயன்படுத்துகிறாள் கிருஷ்ணா. ராமின் நிலை என்னவாகும்? ஆள் மாறாட்டம் சதியை மீறி அர்ஜூன் ஜோடிக்கு திருமணம் நடக்குமா? சட்டத்தின் பிடியில் இருந்து ராமை காப்பாற்றிய பாரதி, கிருஷ்ணாவின் சதியில் இருந்து தன் குடும்பத்தை காப்பாற்றுவாளா? எதிர்பாராத திருப்புமுனை காட்சிகளுடன் தொடர்கிறது, தொடர்.

நிழல்கள் ரவி, குட்டி பத்மினி

நிழல்கள் ரவி, குட்டி பத்மினி

இந்த தொடரில் நிழல்கள் ரவி, குட்டி பத்மினி, ஏ.ஆர்.எஸ், லாவண்யா, சுகுணா, ஸ்ரீவித்யா, சுஜாதா, ஸ்வேதா, மும்தாஜ், குமரேசன், ராஜா, ராஜ்கமல் ராஜ்குமார், டி.வி. ராமானுஜம், பேபி ஆரியா, பேபி நேகா. கதை: ரித்திகா. திரைக்கதை: கீர்த்தனா. இயக்கம்: தமிழ் பாரதி. எபிசோட் இயக்கம்: ஆசைத்தம்பி, சுதர்சன். ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன். தயாரிப்பு: குட்டி பத்மினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X