‘கல்யாணம் முதல் காதல் வரை’ விஜய் டிவியில் புதிய சீரியல்
விஜய் டிவியில் இந்தி சீரியல்களை டப்பிங் செய்து ஒளிபரப்பி வந்தனர். இப்போது ரீமேக் செய்து ஒளிபரப்ப உள்ளனர்.
நவம்பர் 3ம் தேதி இன்று முதல் ‘கல்யாணம் முதல் காதல் வரை' என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
இத் தொடர் ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பான ‘ஹெ ஹை மொகபத்தின்' என்ற மிகப் பிரபலமான தொடரின் தமிழ் ரீமேக்காக விஜய் டிவியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கல்யாணம், காதல்
அர்ஜுன் சுவாமிநாதன் விவாகரத்து பெற்ற ஒருவர். அவருக்கு பூஜா என்ற அழகான மகள் இருக்கிறாள். எதிர் வீட்டில் குடி வரும் ப்ரியா, பூஜாவை அன்புடன் நேசிக்கிறாள். தாயில்லாத பூஜாவும் பிரியாவிடம் அன்பாகப் பழகுகிறாள்.

மகள் மேல் பாசம்
எப்பொழுதும் அலுவலக வேலையாக பிஸியாக இருக்கும் அர்ஜுனுக்கு, தன் மகள் மேல் பாசம் இருந்தாலும், அவளைச் சரிவர கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கிறது.

எதிரெதிர் வீடுகள்
இதனை பல சமயங்களில் கவனிக்கும் பிரியாவிற்கு அர்ஜுன் மேல் கோபம் வருகிறது. எதிரெதிர் வீடுகளில் இருந்தாலும் பிரியாவும், அர்ஜுனும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

இணையும் ஜோடி
ஆனால், விதி அவர்களை இணைத்து வைக்கிறது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் காதல் எப்படி வருகிறது என்பதைச் சொல்லும் தொடர்தான் ‘கல்யாணம் முதல் காதல் வரை'.

புதுமுக நடிகர்கள்
முற்றிலும் மாறுபட்ட காதல் கதையான இத் தொடரில் புதுமுகங்கள் பிரியா, அமித் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் குயிலி, சாதனா, விஷ்வம், ரவிசங்கர், மனோஜ், வைசாலி, நந்தினி, லோகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இன்று முதல் புது சீரியல்
இத் தொடரை தாய் செல்வம் இயக்க மருதுசங்கர் வசனம் எழுதுகிறார். ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் டிவியில் இன்றுமுதல் முதல் இரவு 7 மணிக்கு திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications