»   »  ஆணவக்கொலைகளை ஆதரிக்கிறதா 'குலதெய்வம்'?

ஆணவக்கொலைகளை ஆதரிக்கிறதா 'குலதெய்வம்'?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சன்டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் டிவி சீரியலான குலதெய்வம் சீரியல் ஆணவக்கொலைகளை ஆதரிக்கும் வகையில் காட்சிகளை ஒளிபரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சன் டிவியில் குலதெய்வம் என்ற தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மெட்டி ஒலி, நாதஸ்வரம் ஆகிய தொடர்களை இயக்கிய திருமுருகன்தான் இந்த தொடரின் இயக்குநர்.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறு வயது காதல்களும், ஆணவக்கொலையை ஆதரித்துமே காட்சிகள், வசனங்கள் வைக்கப்படுகின்றன.

ஆணவக்கொலை

அருணாசலம் என்பவர் சாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் அவரை மனைவியுடன் குடும்பத்தோடு வெட்டி சாய்க்கிறது ஒரு கும்பல். இதற்காக ஆண்டு தோறும் காவிரிக்கரையில் திதி வேறு கொடுக்கிறது அந்த கும்பல். அருணாசலத்தின் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக வளர்ப்பதோடு அதே பெயரை தனது பெயராக்கி வாழ்க்கிறார் தொழிலதிபர் அருணாசலம்.

காதல் திருமணம்

தொழிலதிபர் அருணாசலத்தின் மகள் காதல் திருமணம் செய்து கொள்ள, அவரது மகள் வயிற்று பேத்தி சிரேயாவும் படிக்கும் போதே காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போகிறாள். மகன் வீட்டு பேரனும் ஊர் சுற்றிக்கொண்டு பெயரை கெடுக்கிறான்.

கொல்ல துடிக்கும் தந்தை

சிரேயா துரத்தும் அப்பா அவளது கணவனை கொல்ல விரட்டுகிறார். ஒருவழியாக இருவரும் தப்பித்து இப்போது குடும்பத்துடன் ராசியாகிவிட்டனர். குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து விட்டனர்.

கலாட்டா காதல்

அருணாசலத்தின் பேரன் ரோகித், கீர்த்தியை காதலித்து ஏமாற்றிவிட்டு அத்தை மகள் கயலை காதலிக்கிறான். இதற்காக வயதுக்கு மீறி அவன் செய்யும் கலாட்டாவிற்காக சிறைக்கு செல்கிறான்.

செக் வைக்கும் கயல்

ரோகித்தை காப்பாற்றுவதற்காக அவன் தந்தை கேசவ் விஷம் குடிக்க, அத்தை ஆர்த்தியின் பேச்சுக்காக கேசை வாபாஸ் வாங்க சம்மதிக்கிறாள். அதற்கு கயல் போடும் கன்டிசன், கீர்த்தி ரோகித் திருமணம் நடக்க வேண்டும் என்பதே.

ஆணவ வசனங்கள்

கீர்த்தியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழ, சாதி மாறி திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை கொள்ள துடிக்கிறது. ரோகித்தை கத்தியால் குத்த வந்த போது கீர்த்தி தடுத்து காப்பாற்றுகிறாள்.

திருமணம்

ஒரு வழியாக கீர்த்தி ரோகித் திருமணம் நடக்கிறது. வீட்டிற்கு எதிரிலேயே துப்பாக்கியுடன் காத்திருந்த கீர்த்தியின் உறவினர்களும், மர்ம மனிதனும் ரோகித் உயிருக்கு குறி வைக்கிறான்.

பலியான கீர்த்தி

மர்மமனிதனின் துப்பாக்கி குண்டுக்கு கீர்த்தி பலியாகிறாள். கீர்த்தியின் மரணத்திற்காக ரோகித் அழுவது கொஞ்சம் ஒவர் ஆக்டிங்தான் என்றாலும் கூட நடிப்பவர்கள் அடக்கி வாசிக்கின்றனர்.

ஆணவக்கொலைக்கு ஆதரவா?

இந்த தொடரில் ஏற்கவே ஒரு குடும்பத்தை ஆணவக்கொலை செய்தனர். கொடைக்கானலில் மற்றொரு காதல் ஜோடியை ஆணவக்கொலை செய்ய விரட்டுகிறது ஒரு கும்பல். கீர்த்தி ரோகித்தை கொல்லவும் துடித்த கும்பல் கடைசியில் கீர்த்தியின் உயிரை பலி கொண்டுவிட்டது.

ப்ரைம்டைமில் குடும்பதோடு பார்க்கப்படும் சீரியல்களில் இதுபோன்ற காட்சிகளை ஆதரிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

English summary
Is Kuladeivam TV Serial encouraging in honour killin? asks the readers.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos