பொன்னியின் செல்வன் படித்து நடிக்க வந்தேன்… ஆபிஸ் லட்சுமி

By Mayura Akilan

ஆபிஸ் சீரியலில் லட்சுமி என்றால் சட்டென்று அடையாளம் தெரியும்... அவரின் சொந்தப் பெயரே தெரியாத அளவிற்கு அந்தப் பெயர் பிரபலப்படுத்திவிட்டது.

அழகாய் அமைதியாய் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியுள்ளார். சீரியலில் நடிக்க வரும் முன் மக்கள் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக சின்னத்திரையில் பயணத்தை தொடங்கிய லட்சுமியின் ஒரிஜினல் பெயர் மதுமிலா.

பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கேட்டால், மதுமிலா என்றால் இனிமையானவள் என்று அர்த்தம் என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார். மீடியா பக்கம் கவனம் திரும்பியது எப்படி என்று அவரே கூறியுள்ளார் படியுங்களேன்.

யாழ்பாணத்து பொண்ணு

யாழ்பாணத்து பொண்ணு

மதுமிலாவின்வின் சொந்த ஊர் யாழ்ப்பாணம். வேலை விசயமாக அம்மா, அப்பா சென்னையிலேயே செட்டிலாகிவிட சிறுவயது முதலே சென்னைவாசியாகிவிட்டார்.

பொன்னியின் செல்வன் ரசிகை

பொன்னியின் செல்வன் ரசிகை

சிறுவயது முதலே பொன்னியின் செல்வன் படித்து ரசிகையாகிவிட்டாராம். அந்த தாக்கம் தான் மக்கள் தொலைக்காட்சியில் நுழைய காரணமாக இருந்துள்ளது.

தொகுப்பாளினி டூ நடிகை

தொகுப்பாளினி டூ நடிகை

மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த போது விஜய் டிவியில் தர்மயுத்தம் தொடர் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆபிஸ், தாயுமானவன் என சீரியலில் பிரபலமாகிவருகிறார்.

சினிமாவில் நடிக்க ஆசை

சினிமாவில் நடிக்க ஆசை

பொதுவாக சின்னத்திரை நடிகைகளைக் கேட்டால் சினிமாவில் நடிக்க ஆசையில்லை என்பார்கள். ஆனால் மதுமிலாவோ, சினிமாவில் நடிக்க ஆசை என்கிறார். இப்போதே வாய்ப்புகள் வருகிறது. கையில் 3 சீரியல் இருப்பதால் சினிமா என்ட்ரியை கொஞ்சம் ஒத்தி வைத்துள்ளாராம்.

அம்மாதான் எல்லாமே…

அம்மாதான் எல்லாமே…

சீரியலில் மதுமிலா அணியும் உடைகள் எல்லாமே கொஞ்சம் வித்தியாசமாக அதே சமயம் அழகாகவும் இருக்கும். அவரது உடையை டிசைன் செய்வது அம்மாதானாம். டிரஸ்கோட் டிப்ஸ் கொடுப்பார் அம்மா என்கிறார் மதுமிலா.

பெற்றோர் பார்க்கும் பையன்தான்…

பெற்றோர் பார்க்கும் பையன்தான்…

ஆபிஸ் சீரியலில் விஷ்ணுவை காதலிக்கிறார். தாயுமானவன் சீரியலில் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு வருகிறார். நிஜத்தில் திருமணத்தைப் பற்றிக் கேட்டால், பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X