»   »  திருமணம் முடிந்த கையோடு சீரியலுக்கு வந்த விஜய்யின் காதலி…

திருமணம் முடிந்த கையோடு சீரியலுக்கு வந்த விஜய்யின் காதலி…

Posted by:
Subscribe to Oneindia Tamil

காவலன் படத்தில் விஜய் காதலியாக நடித்த மித்ராகுரியன் சீரியலில் ஹீரோயினாக களமிறங்கியுள்ளார். சினிமாவில் ஹீரோயினாக நடித்தவர் சீரியலில் ஹீரோயினாக நடிக்க வருவது புதிய விசயமில்லை. ஆனால் திருமணம் முடிந்த கையோடு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரியசகி என்ற சீரியலில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகை மித்ராகுரியன்.

காவலன் படத்திற்குப் பின்னர் கந்தா, சமீபத்தில் வெளியான புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார். கடந்த ஜனவரி மாதம் தனது காதலர் வில்லியம் பிரான்சிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மித்ரா குரியன் தற்போது நந்தனம் படத்தில் நடித்து வருகிறார். சீரியல் வாய்ப்பு வரவே மறுக்காமல் ஒத்துக்கொண்டார்.

தமிழ் சீரியல் உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதில் புதுவரவு மித்ராகுரியன். சீரியல் உலகிற்கு அழகான புதுவரவு.

பிரியசகி

பிரியசகி சீரியலின் கதாநாயகி திவ்யாவாக நடித்துள்ள மித்ராகுரியன், ஒரு பாசமான மகளாக, சகோதரியாக, மருமகளாக நடித்துள்ளார்.

அழகான திவ்யா

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திவ்யாவிற்கு அழகான, களையான தோற்றம். ஜவுளிக்கடையில் வேலை செய்தாலும், பணியிடத்தில் கிடைக்கும் மரியாதை உடன் வேலை செய்யும் பெண்களுக்கு சற்றே பொறாமையை வரவழைக்கிறது.

ஏழ்மையிலும் மகிழ்ச்சி

மளிகை சாமனுக்கு பணம் கேட்கும் அம்மா, செல்போன் ரீசார்ஜ் செய்ய காசு கேட்கும் அப்பா, புத்தகம் வாங்க பணம் கேட்கும் சகோதரன் ஆகியோருக்கு மத்தியில் கடன் தொல்லை வேறு இவற்றை புன்னகையோடு சமாளிக்கிறார் திவ்யா.

அன்பான சமாளிப்பு

பிறந்த வீட்டில் தியாக உள்ளத்தோடு பொறுமையாக இருக்கும் திவ்யா புகுந்த வீட்டில் கணவர், மாமியார் ஆகியோர் கொடுக்கும் சங்கடங்களை சமாளித்து அவர்களையும் நேசிக்கிறாள். அவளின் ஒரே ஆதரவு மாமனார்தான்.

வழக்கமான கதையோ

டிவி சீரியல் என்றாலே மாமியார் கொடுமை, புகுந்த வீட்டில் பிரச்சனைதான். கண்ணீர் காவியங்களாகவே இருக்கிறது. இதுவும் வழக்கமான கதையா? ஏதாவது சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்களாக என்பது போக போகத்தான் தெரியும். இந்த சீரியலில் மித்ரா குரியனுடன் நித்யா, ராஜ்மோகன் ரூபஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.

English summary
Actress Mithra kurian debut Tamil TV serial Priyasagi. The serial telecasted from 08th June Monday to Friday at 09:30 pm on Zee Tamil Tv
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos