»   »  என்னதான் வேணும் இந்த ‘அம்மா’க்களுக்கு?

என்னதான் வேணும் இந்த ‘அம்மா’க்களுக்கு?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சீரியல்களில் சில காலம் காணாமல் போயிருந்த மாமியார், மருமகள் சண்டை தற்போது மீண்டும் தலை தூக்கி இருக்கிறது.

அதிலும் பணத்திற்காக மகனின் எதிர்காலத்தை பகடை உருட்டுகிறார்கள் இந்த சீரியல் மாமியார்கள்.

சீரியலுக்கு ஒரு மாமியார் இருந்தாலே அவரது அட்டகாசம் தாங்க முடியாது. ஆனால், வம்சம் சீரியலிலோ ஒரே நேரத்தில் இரண்டு மாமியார்கள் கலந்து கட்டி கலங்கடிக்கின்றனர்.

மதனா... மன்மதனா?

இவர் வெறும் மதனா அல்லது மன்மதனா எனக் கேட்கும் அளவிற்கு அடுத்தடுத்து புதிய ஜோடிகளைத் தேடி வருபவர் டாக்டர் மதன். ஆரம்பத்தில் சக்தியோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

பணத்திற்காகவே...

அப்போதும் அம்மாவும், மகனும் சேர்ந்து பணத்திற்காகவே சக்தியை மணக்கத் திட்டமிட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக அந்தத் திருமணம் நின்று போனது.

மருமகளை ஒழிக்க திட்டம்...

மதனால் ஏமாற்றப்பட்ட பூமிகாவை கரம் பிடித்தார் மதன். ஆனால், மருமகளை ஒழித்து விட்டு மகனுக்கு வேறு ஒரு பணக்கார பெண்ணை மணமுடிக்கவே அவரது அம்மா திட்டமிடுகிறார்.

முறிந்து போன காதல்...

அப்போது தன்னுடன் பணி புரியும் டாக்டர் ஒருவரை காதலிக்கிறார் மதன். உடனே அவரது காதலுக்காக மருமகளை ஒழித்துக் கட்டவும் துணை புரிகிறார் அந்த அம்மா. பின் அந்தக் காதலும் முறிந்து போகிறது.

நடிகையுடன் காதல்...

அதனைத் தொடர்ந்து மருமகளின் சாயலில் நடிகை ஒருவரைக் காதலிக்கிறார் மதன். அதற்கும் உடந்தையாக இருக்கிறார் அந்த அம்மா.

கடைசியில் அண்ணன் மகள்...

அடுத்தடுத்து மகனின் காதல்கள் பொய்த்துப் போக, கடைசியாக தனது அண்ணன் மகளையே மருமகளாக்க திட்டமிடுகிறார். மகனுக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பதை அவர் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.

வாரிசு வந்தும்...

எத்தனையோ வீட்டை எதிர்த்து நடந்த காதல் திருமணங்களில் வாரிசு பிறந்ததும் அவர்களை பெற்றோர் ஏற்றுக் கொள்வதுண்டு. ஆனால், பேரன் பிறந்தும் மருமகளை ஏற்றுக் கொள்ள இந்த மாமியாருக்கு மனது வரவில்லை.

பணக்கார மருமகள்...

இவரது ஒரே எண்ணம், தனது மகனுக்கு பணக்கார பெண் மனைவியாக வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர் தயாராக இருக்கிறார்.

கொலையும் செய்வாள்...

இவர் இப்படியென்றால் இதே சீரியலில் மற்றுமொரு மாமியார், பணத்திற்காக தனது மருமகளைக் கொலை செய்யவும் துணிகிறார். சொத்து ஒன்று மட்டுமே அவரது ஒரே குறிக்கோள்.

பழைய கதை...

இவர்களைப் பார்க்கும் போது ஒரு கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது. பள்ளியில் பென்சில் திருடிய தன் மகனை கண்டிக்கத் தவறுகிறார் ஒரு தாய். இதனால் தொடர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு, பின்னாளில் பெரிய திருடனாகிறான் அந்த மகன்.

காதைக் கடிக்கும் மகன்...

போலீஸ் அவனைக் கைது செய்து சிறையில் அடைக்கிறது. அங்கு அவனைச் சந்திக்க வருகிறாள் அம்மா. அப்போது அம்மாவை அருகில் அழைத்து, அவரது காதைக் கடித்து விடுகிறார் மகன்.

உன்னால் தான் அம்மா...

பின் வலியால் துடிக்கும் அம்மாவிடம், அம்மகன், ‘நான் முதல்முறை திருடிய போதே என்னைக் கண்டித்திருந்தால், இவ்வாறு என் வாழ்க்கை திசை மாறியிருக்காதே' எனக் கூறுகிறான்.

அன்னை வளர்ப்பினிலே...

இவ்வாறு வம்சம் சீரியலைப் பார்க்கும் போது நமக்கும் இந்தக் கதை தான் நினைவில் வருகிறது. ‘எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே'.

English summary
In Tamil television mega serials the character of mother-in-laws are shown as worst and bad.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos