சன் டிவியில் மீண்டும் சண்டை போட வரும் சின்ன பாப்பா பெரிய பாப்பா

By Mayura Akilan

சன் டிவியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற கமெடி சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இதில் ஸ்ரீபிரியா,நிரோஷா, எம்.எஸ்.பாஸ்கரின் கலக்கல் காமெடி இல்லத்தரசிகளுக்கு அதிகமாக பிடித்துப்போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கலகலக்க வைக்க வருகிறார்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பா.

இம்முறை இருவர் அல்ல நால்வர் வருகிறார்கள். இதில் முக்கியமாக நளினி, நிரோஷா, மதுமிதா ஆகியோர் ரசிகர்களை கிச்சுக்கிச்சு மூட்ட வருகிறார்கள்.

வரும் சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் சின்ன பாப்பா பெரிய பாப்பா ஒளிபரப்பாக உள்ளது.

ஒரே சண்டைதான்

ஒரே சண்டைதான்

சின்ன பாப்பாவிற்கும் பெரிய பாப்பாவிற்கும் எதற்கெடுத்தாலும் சண்டைதான். இப்போ இந்த சண்டை இன்னும் அதிகமாகும்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக்

வாட்ஸ் அப், ஃபேஸ்புக்

இப்ப இருக்கிற சின்ன பாப்பா பெரிய பாப்பாஸ் ஃபேஸ் புக், வாட்ஸ் அப் என ரொம்ப அட்வான்ஸ் ஆக சண்டை போடுவாங்களாம்.

நளினியின் அதிரடி

நளினியின் அதிரடி

சீரியல்களில் வில்லத்தனம் செய்த நளினி இப்போது காமெடியிலும் கலக்கி வருகிறார். இந்த தொடரில் காமெடி மாமியாராக கலக்கப் போகிறாராம்.

தாதா நிரோஷா

தாதா நிரோஷா

பழைய சின்ன பாப்பா நிரோஷாவே சீசன் 2விலும் தாதா சின்னப்பாப்பாவா கலக்க வருகிறார்.

பட்டாபி இல்லையோ

பட்டாபி இல்லையோ

பழைய சின்ன பாப்பா பெரிய பாப்பாவில் பட்டாபி கதாபாத்திரம்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இதில் எம்.எஸ் பாஸ்கர் கலக்கலாக நடித்திருப்பார்.

குண்டு பாப்பாக்கள்

குண்டு பாப்பாக்கள்

ஸ்ரீபிரியா - நிரோஷா, கல்பனா - நிரோஷா, சீமா - பல்லவி மேனன், நளினி - தேவதர்ஷினி என பல குண்டு பாப்பாக்கள் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் நிற்பது ஸ்ரீபிரியா - நிரோஷா ஜோடியின் அதகளம்தான். மீண்டும் நளினி - நிரோஷா மட்டுமல்லாது பாப்பாஸ்கள் அதிகம் இந்த சீசனில் வருகின்றனர்.

ஒஸ்தி என்ன ஆச்சு?

ஒஸ்தி என்ன ஆச்சு?

சன் டிவியில் சனிக்கிழமை இரவு பத்துமணிக்கு ஒஸ்தி என்ற காமெடி நிகழ்ச்சியை ராடான் நிறுவனம் தயாரித்து வழங்கியது. அது போர் அடித்துவிட்டதோ என்னவோ இந்த வாரம் முதல் சன் டிவியில் சனிக்கிழமை தோறும் இரவு பத்துமணிக்கு சின்ன பாப்பா, பெரிய பாப்பாஸ் ஒளிபரப்பாகும் என முன்னோட்டம் போடுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X