நல்ல நேரம்: சின்னத்திரையில் தேவர் பிலிம்ஸ்
சினிமாவில் யானை, புலி, சிங்கம் போன்ற விலங்குகளை கொண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சின்னத்திரையில் அடி எடுத்து வைத்துள்ளது.
ஜீ தமிழ் சேனலில் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் யானையை வைத்து நல்ல நேரம் என்ற சீரியலை தொடங்கியுள்ளது தேவர் பிலிம்ஸ்.
எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா ஆகியோருடன் யானைகள் நடித்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படத்தின் பெயரையே சென்டிமென்டாக முதல் சீரியலின் பெயருக்கும் வைத்துள்ளனர்.

தேவர் பிலிம்ஸ்
படம் ஆரம்பிக்கும் முன்பாக யானை ஒன்று கம்பீரமாக வந்து தும்பிக்கையை தூக்கி சலாம் போடும். உடனே குட்டீஸ்கள் உற்சாகமாகிவிடுவார்.

ஆடு, நாய், யானை
ஆட்டுக்கார அலமேலு ஆடு தொடங்கி நல்ல நேரம் யானைகள், வேட்டைக்காரன் புலி, அன்னை ஓர் ஆலயம் யானை என விலங்குகளை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த நிறுவனம் தேவர் பிலிம்ஸ்

சாண்டோ சின்னப்பத்தேவர் மகன்
எம்.ஜி.ஆர் படங்களில் அடியாளாக நடித்த சாண்டோ சின்னப்பத்தேவரின் நிறுவனம்தான் தேவர் பிலிம்ஸ். சின்னப்பத்தேவர் ஒரு உடற்கலை வல்லுனர். நல்ல உடற்கட்டு உள்ளவர். அவர் எடுக்கும் படங்களில் சிறிய வேடங்களிலும் அடிவாங்கும் வில்லன் வேடங்களிலும் நடிப்பார்.

விலங்கு பாசம்
அம்மா சென்டிமென்ட், எம்.ஜி.ஆர், முருகன் என நம்பிக்கை கொண்ட தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து விலங்குகள் நடித்த படங்கள் அதிக அளவில் சூப்பர் ஹிட் ஆனது.

சினிமா டூ சின்னத்திரை
தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சின்னத்திரையில் களமிறங்கியுள்ளது. அதுவும் யானையையும், சிறுவனையும் வைத்து நல்லநேரம் என்ற சீரியலை தயாரித்துள்ளது.

சிறுவனும் யானையும்
தென் மாவட்ட கிராமத்தை கதைக் களமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டதாம். வீட்டை விட்டு வெளியேறும் ஒரு சிறுவனுக்கும், காட்டை விட்டு வெளியேறும் ஒரு குட்டி யானைக்குமிடையே நடக்கும் பாசப் போராட்டம்தான் கதை.

வேலு – ராமு
வேலு என்ற சிறுவன் வீட்டை விட்டு வெளியேறி, காட்டை விட்டு வெளியேறும் யானை ராமுவை சந்திக்கிறான். இவர்கள் இருவரும் நண்பர்களாகின்றனர்.
தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநரான தியாகராஜன்தான் இந்த சீரியலை இயக்கியுள்ளாராம்.

குட்டீஸ் பேவரைட்
வெள்ளித்திரை நட்சத்திரங்களும் இந்த சீரியலில் பெருமளவில் நடிக்க உள்ளனராம். சின்னத்திரையில் யானையை வைத்து சீரியல் எடுப்பது இதுதான் முதல் முறை என்பதால் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும் என்கின்றனர் சீரியல் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications