ஒரு நாயகி உருவாகிறாள்…. ‘நிலா’ பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

குட்டி நட்சத்திரத்திரம் நேகாவிற்கு இதுதான் முதல் தொடராம். ( பார்த்தால் நம்ப முடியலையே) ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சொன்ன காட்சியை ஒரே டேக்கில் நடித்து விட்டு, நொடியில் அடுத்த காட்சிக்குத் தயாராகிவிடுகிறார். ( வருங்கால கதாநாயகி இப்பவே ரெடி)
நேகா சென்னை சூரப்பட்டில் உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியில் 6-வது படிக்கிறார். பெற்றோர் ராஜேஷ்-பிரசன்னாவின் ஒரே வாரிசு. அப்பா என்ஜினீயர். அம்மா குடும்பத்தலைவி.
நேர்முகத்தேர்வில் எனக்கு எங்க அம்மா வேணும்' என்ற டயலாக்கை டைரக்டர் சொன்னது தான் தாமதம், இவள் அந்த டயலாக்கை ஏற்ற இறக்கத்துடன் சொல்லி முடித்து விட்டாள். அப்போதே டைரக்டர் உற்சாகமாகி, எங்க கதைக்கான நிலா கிடைச்சாச்சு' என்று தேர்வு செய்து விட்டார்களாம். படிப்பில் மட்டுமல்ல நடிப்பிலும் செம கெட்டியாம். அதனால் நேகா நடிப்பதற்கு பள்ளி நிர்வாகத்தினர் தடை விதிக்கவில்லையாம்.
நேகாவின் நடிப்பை பார்த்து இயக்குநர் சி.ஜே.பாஸ்கர் இப்போது இயக்கி வரும் மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல்' தொடரிலும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். நேகாவின் நடிப்பை பற்றி கூறிய அவர், அன்றைய குட்டி மீனாவை பார்த்ததுபோல் அத்தனை துறுதுறுப்பாக இருக்கிறாள். மீனா மாதிரியே கலைத்துறையில் பெரிய நட்சத்திரமாக வருவாள் என்று பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் இயக்குநர் சி.ஜே. பாஸ்கர்.
எப்படியோ இன்னொரு கதாநாயகியை உருவாக்கினால் சரிதான்.


Click it and Unblock the Notifications