‘பிளேஃபுல் கிஸ்’: இன்னுமொரு கொரியன் சீரியல்!
தமிழ் சினிமாவில் கொரிய சினிமாக்களின் ஆதிக்கம் என்றால், இப்போது தொலைக்காட்சிகளில் தமிழ் பேசும் கொரியன் சீரியல்கள் ஆதிகம்...
புதுயுகம் தொலைக்காட்சியில் ஒரு கலகலப்பு காதல் தொடராக, ‘பிளேஃபுல் கிஸ்' என்ற கொரிய டப்பிங் தொடர் ஒளிபரப்பாகிறது.
உலகப் புகழ்பெற்ற ‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்' தொடரில் ஜோ வேடத்தில் நடித்திருந்த ஹிம் ஹைன் ஜூங் இந்தத் தொடரில் காதல் நாயகனாக நடிக்கிறார்.

புத்திசாலி பையன்
படிப்பு, விளையாட்டு போன்ற அத்தனை விஷயங்களிலும் பள்ளியில் முதல் மாணவனாக இருக்கிறான் ஜோ. அந்தப் பள்ளியிலேயே மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்று கடைசி இடத்தில் இருப்பவர் மக்கு மாணவியான சானியா.

மக்கு மாணவி
ஜோவின் ஸ்டைல், திறமையினால் கவரப்படும் சானியாவுக்கு காதல் மலர்கிறது. தன் மனதில் நினைத்ததை எல்லாம் கடிதமாக எழுதி ஜோவிடம் கொடுக்கிறாள். அந்தக் காதல் கடிதத்தைப் படிக்கும் ஜோ, ‘எனக்கு முட்டாள்களைப் பிடிக்கவே பிடிக்காது' என்று புறக்கணிக்கிறான்.

சபதம்
அதனால் படிப்பிலும் ஜோவை காதலிப்பதிலும் வெற்றிபெறுவேன் என்று சபதம் போடுகிறாள். இந்த முயற்சியில் சானியா வெற்றி அடைந்தாளா என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது, ‘பிளேஃபுல் கிஸ்' தொடர்.

வாரம் 5 நாள்
காதல், கலகலப்பு நிறைந்த, ‘பிளேஃபுல் கிஸ்' தொடர் புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கும், 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications