» 

நிர்மலா பெரியசாமி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை மீட்ட போலீசார்!

Posted by:
Give your rating:

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியை போலீசார் மீட்க முயற்சி செய்தனர். இதனைக் கண்டித்த தொலைக்காட்சி நிறுவன ஊழியர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிர்மலா பெரியசாமி நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பொதுமக்களின் குறை தீர்ப்பு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடியும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்றனர். நிர்மலா பெரியசாமி இருவரிடமும் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற காதல் ஜோடியினர் மேல் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த காதல் ஜோடி டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது தெரியவந்ததும் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் வந்து காதலனிடம் இருந்து காதலியை மீட்க முயற்சி செய்தனர். அப்போது காதல் ஜோடிக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலீசார் அதிரடியாக காதல் ஜோடியை பிரிக்க முயற்சி செய்ததால் தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் இதனை தடுக்க முயற்சி செய்தனர். போலீசாரின் செயலைக்கண்டித்து அவர்கள் வடக்கு உஸ்மான் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த தென் சென்னை காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை சமாதானப்படுத்தினர்.

சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் நிர்மலா பெரியசாமி, காதலர்கள் லாரன்ஸ், செல்வமேரி ஆகியோர்களை நாங்கள் நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம்.
அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். செல்வமேரியின் பெற்றோர் போலீசாரையும், வெளியாட்களையும் அழைத்து வந்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது. போலீசாரும் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் புகுந்து லாரன்சை தாக்கிவிட்டு செல்வமேரியை இழுத்து செல்ல முயற்சித்தனர். அதனால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.

யார் வந்து என்ன பிரச்சனை செய்தாலும் தங்களை பிரிக்க முடியாது என்று காதல் தம்பதியர் உறுதிபட கூறினர்.

சரிதான் இனி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங் ஏறிடும் என்று அக்கம் பக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.

Read more about: television, chinnathirai, தொலைக்காட்சி, serials
English summary
Z Tamil TV program in Solvathellam Unmai. Nirmala Periyasamy co-ordinate the program.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos
 
X

X
Skip Ad
Please wait for seconds

Bringing you the best live coverage @ Auto Expo 2016! Click here to get the latest updates from the show floor. And Don't forget to Bookmark the page — #2016AutoExpoLive