» 

சன் டிவியில் புதிய சீரியல் பொன்னூஞ்சல்

Posted by:
 

சன் டிவியில் வரும் திங்கட்கிழமை முதல் பொன்னூஞ்சல் என்ற புதிய சீரியல் தொடங்க உள்ளது.

தியாகம் தொடர் அவசரம் அவசரமாக முடிக்கப்பட்டு அதற்கு பதிலாக பொன்னூஞ்சல் தொடர் ஆரம்பமாகிறது.

பெண்களைப் பற்றியும், ஆணாதிக்கத்தை எதிர்க்கும் விதமாக இருக்கும் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள்.

தியாகம் அவுட்

பிரபல திரைப்பட நடிகை காவேரி முதன் முறையாக அறிமுகமான தொடர் தியாகம். சரியான கதையம்சம் இல்லாத தொடர் என்று ஆரம்பத்திலே பெயரெடுத்துவிட்டது. அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு அதற்காக வில்லத்தனம் செய்யும் கதை. டிஆர்பியில் அடிவாங்கியதால் 301 வது எபிசோடுகளோடு அவுட் செய்துவிட்டனர்.

பொன்னூஞ்சல்

புதிய தொடரான பொன்னூஞ்சல் திங்கட்கிழமை முதல் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரின் முன்னோட்டம் கடந்த சில தினங்களாக போடத் தொடங்கிவிட்டனர்.

சேது அபிதா

சேது பட நாயகி அபிதா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஜ்காந்த், மற்றும் பிரபல சீரியல் நடிகைகள் நடிக்கின்றனர்.

திருமதி செல்வத்தில்

சன் டிவியில் 4 ஆண்டுகாலம் திருமதி செல்வம் தொடரின் மூலம் அர்ச்சனாவாக நடித்த அபிதா. ஒரு சிறு பிரேக்கிற்கு அப்புறம் இந்த தொடரில் நடிக்கிறார். இந்த தொடரும் திருமதி செல்வம் போல ஹிட் தொடராகுமா என்பது போகப் போகத் தெரியும்.

Read more about: sun tv, abitha, serial, television, சன் டிவி, அபிதா, சீரியல், தொலைக்காட்சி
English summary
A new serial Ponnoonjal telecast on Sun TV week days 1.P.M

Tamil Photos

Go to : More Photos