»   »  சதீஷ் கொலையில் இருந்து உமா குடும்பம் தப்புமா? பிரியமானவள்... திகு திகு திருப்பம்

சதீஷ் கொலையில் இருந்து உமா குடும்பம் தப்புமா? பிரியமானவள்... திகு திகு திருப்பம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உமா மாதிரி ஒரு மாமியார் வேண்டும் என்பது சன்டிவியில் பிரியமானவள் சீரியல் பார்க்கும் இளம் பெண்களின் கனவு, ஆசை. அந்த அன்பான அழகான, அன்பான மாமியார் இப்போது மருமகள் பூமிகா உடன் சேர்ந்து கொலை வழக்கு ஒன்றில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார். மாமியாரையும், மருமகளையும் மாட்டிவிட்டது போலீஸ் கிரி.

மகளின் வாழ்க்கையை சீரழித்தவனை கொலை செய்த கிரி, அந்த வழக்கில் இருந்து தான் தப்பிக்க கொலை பழியை கிருஷ்ணன் குடும்பத்தினர் மீது போடுகிறான். உமாவும், பூமிகாவும் கொலையில் மாட்டி விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

கொலை வழக்கில் கிரிதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம் இன்ஸ்பெக்டர் பிரபுமணி கையில் உள்ளது. இதற்காக ஒரு கோடி வரை கொடுத்து அந்த ஆதரத்தை வாங்கியுள்ளான் கிரி.

ஊருக்கு போன ரத்தினம்

ஊருக்கு போன ரத்தினம்

சதீஷ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த ரத்தினம், மாற்றப்பட்டு மீண்டும் கிரியே நியமிக்கப்பட்டுள்ளதால் உமா குடும்பத்தினருக்கு நெருக்கடி அதிகரிக்கிறது.

நெருங்கும் கெடு

நெருங்கும் கெடு

சதீஷ் கொலை வழக்கில் உமாவும், பூமிகாவும் நிரபராதிகள் என்பதை நிரூபிக்கும் கெடு முடியப்போகிறது. இதற்கான ஆதரத்தை தேடி வருகின்றனர் உமாவின் மகன்கள். கிரிக்கும், பிரபுமணிக்கும் உள்ள தொடர்பு தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் போகிறது.

கொல்ல முயற்சி

கொல்ல முயற்சி

கொலை வழக்கில் உள்ள ஆதாரங்களை வைத்துக்கொண்டு தன்னை மிரட்டி பணம் பறிக்கும் இன்ஸ்பெக்டர் பிரபுமணியை கொலை செய்ய டிசி கிரி திட்டம் போடுகிறான். இது பிரபு மணிக்கும் தெரியவருகிறது.

மிரட்டும் பிரபுமணி

மிரட்டும் பிரபுமணி

தன்னை கொல்ல திட்டமிட்ட கிரியை மாட்டிவிட திட்டமிடுகிறான் பிரபுமணி. வீடியோ ஆதாரத்தை கிருஷ்ணனின் மகன்களிடம் கொடுப்பதற்க முடிவு செய்து போன் செய்கிறான்.

உடனே தூக்குங்க

உடனே தூக்குங்க

பிரபுமணி வீடியோவை கொடுக்கும் முன்பாக எப்படியாக அவனை கொலை செய்ய வேண்டும் என்று அடியாளுடன் கிளம்புகிறான் கிரியின் மச்சினன் ராம். இதற்கு கிரியின் மாமாவும் உடந்தையாக இருக்கிறார்.

திகு திகு எபிசோட்

திகு திகு எபிசோட்

சன் டிவியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் பிரியமானவள் சீரியல் எபிசோடு பரபரப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபு மணி வீடியோ ஆதாரத்தை கிருஷ்ணன் குடும்பத்தினரிடம் கொடுத்து விடுவானா? கொலை வழக்கில் இருந்து உமா, பூமிகா தப்புவார்களா? கிரியின் கொலை முயற்சியில் இருந்து பிரபு மணி தப்புவானா ஆகிய கேள்விகளுக்கு விடை தெரியவரும்.

English summary
Priyamanaval serial turning point episode telecast on today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos