»   »  நீ ஒரு லூசுடா... தாலி அறுத்துப் போடுறேன்... குஷ்பு பஞ்சாயத்தில் புது கலாட்டா...

நீ ஒரு லூசுடா... தாலி அறுத்துப் போடுறேன்... குஷ்பு பஞ்சாயத்தில் புது கலாட்டா...

சன்டிவியில் குஷ்பு நடத்தும் நிஜங்கள் நிகழ்ச்சியில் பிரிந்தவர்களை, பிரிய நினைப்பவர்களை சேர்த்து வைத்தாலும் சில சர்ச்சைகளும் எழாமல் இல்லை.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்பு என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. கற்பு மேட்டர் தொடங்கி பொது சிவில் சட்டம் வரை அவர் பேசும் வார்த்தைகள் எல்லாமே சர்ச்சைகள்தான். இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிஜங்கள் நிகழ்ச்சியில் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும் என்று அழைத்து சில பிரச்சிரனைகளுக்கு தீர்வும் தருகிறார்கள்.

தீர்வு கிடைப்பது நல்ல விஷயம்தான். ஆனால் கணவன், மனைவி சண்டையை பகிரங்கப்படுத்தி கேட்கக் கூடாத வார்த்தைகளை எல்லாம் பொது வெளியில் ஒளிபரப்பி டிஆர்பியை ஏற்றுகின்றனர். கூடவே நிகழ்ச்சியை பார்க்கும் மக்களின் பிபியும்தான் ஏறுகிறது.

காதலித்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டு போன பெண்களின் கண்ணீர் கதைகள் இரு தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. எப்படியாவது கணவனை தேடி கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. இந்த நிகழ்ச்சியை பார்த்தாவது தன் கணவர் தன்னுடன் சேர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்.

குடும்ப பிரச்சினைகள்

குடும்பத்தில் நோயுடன் தவிக்கும் குழந்தைகள், திருமணம் செய்து கொண்ட பின்னரும் ஏற்படும் சிக்கல்கள், கணவன் மனைவி பிரச்சினைகளை பேசி பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் மனநல ஆலோசகர்கள் மூலம் தீர்வு சொல்கின்றனர்.

சந்தேகங்கள்... சண்டைகள்

கணவன் மனைவி இடையிலான சந்தேகத்தினால்தான் பாதி குடும்பங்கள் பிரிகின்றன. திருமணமாகி பல ஆண்டுகள் வாழ்ந்தவர்களைக் கூட சின்ன சந்தேகம் பிரித்து விடுகிறது. அப்படி சந்தேகத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்த தம்பதிகளை அழைத்து நேற்று பேசினார் குஷ்பு.

நீ ஒரு லூசுடா

கணவனும், மனைவியும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். அதை வேடிக்கை பார்த்தார் குஷ்பு. ஒரு கட்டத்தில் சண்டை உச்சத்துக்கு போனது. அவன் லூசு மாதிரி பேசுவான் என்று கணவனைப் பார்த்து மனைவி கூறினார். உடனே கணவர், பாருங்க மேடம் உங்க முன்னாடியே என்னை வாடா... போடா என்று மரியாதையில்லாமல் பேசுகிறாள் என்றார்.

தப்பில்லையே

கணவனைப் பார்த்து மனைவி வாடா போடா என்று கூப்பிடுவது தப்பில்லை என்று கூறினார். மறுபடியும் சண்டை நடக்க, என்னை டெஸ்ட் பண்ணு... நான் கெட்டுப்போனவள் என்று தெரிந்தால் அந்த இடத்திலேயே செத்து போகிறேன் என்று அந்த பெண் கூறினார். தொடர்ந்து, நீயும் நிரூபிக்க தயாரா என்று கேள்வி எழுப்பினார். ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்தது. அந்த கணவனுடன் சேர்ந்து வாழ 6 மாத அவகாசம் கேட்டுவிட்டு பிரிந்து போனது அந்த தம்பதி. அவர்கள் சேர்ந்து வாழ்வார்களா என்பது அவர்களின் கையில்தான் உள்ளது.

தாலியை கழற்றி போடுவோன்

இன்றைக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பற்றி நேற்றில் இருந்தே முன்னோட்டம் போடுகின்றனர். இருவருமே 25 வயதுடைய இளம் வயது தம்பதியினர்தான். என்ன பஞ்சாயத்தோ ஏதோ? கோபத்தோடு அந்த பெண், அவன் செத்தாலும் பரவாயில்ல நான் என் தாலியை கழற்றி போடுறேன் என்று ஆவேசமாக கூறுகிறாள்.

குஷ்பு பஞ்சாயத்து இன்றைக்கு என்ன சர்ச்சையை ஏற்படுத்த போகிறதோ தெரியலையே?.

 

English summary
Sun TV aired a new show titled Nijangal from 12.30 pm to 1.30 pm. The chat show anchored by actress Khushbu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos