twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராதிகாவின் புதிய சீரியலில் ஹீரோயினாகும் நீலிமா ராணி!!

    By Mayura Akilan
    |

    ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரிக்கும் புதிய சீரியலில் நடிகை நீலிமா ராணி ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

    ராசி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியல் சன் டிவியில் நவம்பர் 3ஆம் தேதி முதல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

    சன் டிவியில் ராடான் நிறுவனம் சார்பில் வாணி ராணி, இளவரசி, சிவசங்கரி, ஒஸ்தி என சீரியல், நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என சன்நிறுவனத்தின் சேனல்களில் ராடான் நிறுவனத்தின் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    இளவரசியின் முடிவு

    இளவரசியின் முடிவு

    சன் டிவியில் தினசரி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இளவரசி சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. 1162 எபிசோடுகள் ஒளிபரப்பாகி வரும் இளவரசியில் அனேகம் பேரை சாகடித்து விட்டார்கள். எப்படா முடியும் என்று காத்திருந்த நிலையில் ஒருவழியாக முடிக்கப் போகின்றனர்.

    நீலிமா ராணி

    நீலிமா ராணி

    இளவரசிக்கு பதிலாக ராசி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகப் போகிறது. இந்த தொடரில் நடிகை நீலிமா ராணி ஹீரோயினாக நடிக்கிறார்.

    நிரோஷாவும் வருகிறார்

    நிரோஷாவும் வருகிறார்

    ராதிகாவின் தங்கை நிரோஷாவும் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    சின்னப் பாப்பா

    சின்னப் பாப்பா

    சன் டிவியில் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான சின்னப்பாப்பா பெரிய பாப்பா காமெடி தொடரில் நடித்துள்ளார் நிரோஷா.

    நீண்ட இடைவெளி

    நீண்ட இடைவெளி

    சினிமா, சீரியலுக்கு சில காலம் இடைவெளி விட்டிருந்த நிரோஷா தற்போது மீண்டும் குடும்ப நிறுவனம் தயாரிக்கும் சீரியலில் நடிக்க வருகிறார்.

    ராசி கை கொடுக்குமா?

    ராசி கை கொடுக்குமா?

    ராடான் நிறுவனத்தின் வாணி ராணி சீரியலுக்கு தனி வரவேற்பு உள்ளது. அதேபோல ராசி தொடரும் நீலிமா ராணிக்கும், ராடான் நிறுவனத்திற்கு நல்ல ராசியைத் தருமா? இல்லத்தரசிகள்தான் முடிவு செய்யவேண்டும்.

    English summary
    One of the longest running serials on Sun TV in its afternoon time band at 1:30PM "Ilavarsi" is getting replaced with a new serial "Raasi" from 3rd November onwards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X