தீபாவளிக்கு டிவிக்களில் மோதும் ரஜினி, விஜய்
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைகளோடு புதுப்படமும் ரீலீஸ் ஆவது வாடிக்கை. இந்த ஆண்டு தியேட்டர்களில் மெகா மெகா ஹிட் படங்கள் மோதினாலும், தொலைக்காட்சிகளில் ரஜினியும், விஜயும் மோதிக்கொள்கின்றனர்.
தீபாவளி தினமான அக்டோபர் 22, புதன் கிழமையன்று ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி சேனல்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில திரைப்படங்களின் ஒளிபரப்பு நேரம் பற்றி இன்னும் அறிவிப்பு செய்யப்படாமலே உள்ளது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கோச்சடையான்
ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள கோச்சடையான் திரைப்படம் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் இந்தியாவில் உருவான முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படம். தீபாவளி தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது.

சன் டிவி
விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் ஜில்லா சன்டிவியில் ஒளிபரப்பாகிறது. ஆர்.டி.நேசன் இயக்கத்தில் டி.இமான் இசையைமப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தீபாவளி சிறப்பு திரைப்படமாக ஒளிபரப்பாக உள்ளது.

அஞ்சான்
சூர்யா, சமந்தா, வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடித்திருக்கும் அஞ்சான் தீபாவளி சிறப்புத் திரைப்படமாக சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் இதுவரை முன்னோட்டம் போடவில்லை

விஜய் டிவியில்
நான் சிகப்பு மனிதன்,மான் கராத்தே,ராஜாராணி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

யாமிருக்க பயமே
கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா நடித்திருக்கும் யாமிருக்க பயமே திரைப்படம் ஜீ தமிழ் டிவியில் தீபாவளி தினத்தன்று காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

மஞ்சப் பை
விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடித்த மஞ்சப்பை மாலை 5 மணிக்கு ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞரில் குருவி
கலைஞர் டிவியில் தீபாவளி தினத்தன்று விஜய் த்ரிஷா நடித்த குருவி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சேனல்களைத் தவிர பாலிமர், புதுயுகம்,வேந்தர், என இன்னும் பல சேனல்களில் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

ஐ பாடல் வெளியீட்டு விழா
இந்த திரைப்படங்களோடு கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஐ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜெயா டிவியில் தீபாவளி தினத்தன்று ஒளிபரப்பாக உள்ளது.

பெண்களை கவரும் திரைப்படங்கள்
தீபாவளியன்று பல புத்தம் புதிய திரைப்படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பாக உள்ளதால் அன்றைய தினம் திரையரங்குகளுக்கு பெண்களின் கூட்டம் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











