»   »  அடடே, சன் லைஃப் டிவி சேனலிலும் 'அம்மா' பிறந்தநாள் கொண்டாட்டம் போல?

அடடே, சன் லைஃப் டிவி சேனலிலும் 'அம்மா' பிறந்தநாள் கொண்டாட்டம் போல?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் குழுமத்தின் சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று அவர் நடித்த படங்களை ஒளிபரப்புகிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். கேக் வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, கோவில்களில் தேர் இழுப்பது, அம்மாவின் உருவத்தை பச்சைக் குத்துவது என்று அதிமுகவினர் கொண்டாட்டங்களில் பிசியாக உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

சன் லைஃப்

சன் லைஃப்

சன் குழுமத்தின் ஒரு அங்கமான சன் லைஃப் தொலைக்காட்சி சேனலில் இன்று காலை சிவாஜி கணேசன், ஜெயலலிதா நடித்த தெய்வமகன் படத்தை ஒளிபரப்பினர். மேலும் இன்று இரவு 7 மணிக்கு ஜெயலலிதா நடித்த சூரியகாந்தி படத்தை ஒளிபரப்ப உள்ளனர்.

ஜெயா

ஜெயா

ஜெயா டிவியில் அம்மாவின் பிறந்தநாளையொட்டி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த குமரிக்கோட்டம் படம் இன்று காலை ஒளிபரப்பானது. மதியம் 1.30 மணிக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் ஒளிபரப்பாகிறது.

ஜெயா மூவீஸ்

ஜெயா மூவீஸ்

ஜெயா மூவீஸ் சேனலில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த அன்னமிட்ட கை படம் இன்று காலை ஒளிபரப்பானது. மதியம் 1 மணிக்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த தனிப்பிறவி படம் ஒளிபரப்பாகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

அம்மா பிறந்தநாளைக்கு ஜெயா டிவியில் ஜெயலலிதா படம் ஓடுவது சரி. ஆனால் சன் குழும சேனலிலும் ஜெயலலிதா படம் அதுவும் இன்று ஒளிபரப்பாவதை பார்த்தால் அவர்களும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் போல என்கின்றனர் மக்கள்.

English summary
Sun Life TV Channel has decided to broadcast Jayalalithaa starrer movies on wednesday when TN CM is celebrating her 68th birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos