» 

‘ஆஹா! என்ன ருசி’ புதுமையான சமையல் நிகழ்ச்சி

Posted by:
 

‘ஆஹா! என்ன ருசி’ புதுமையான சமையல் நிகழ்ச்சி
ஆஹா என்ன ருசி சமையல் நிகழ்ச்சியில் வரும் வாரம் முதல் புதிய பகுதி அறிமுகம் செய்யப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள உணவுகளைப் பற்றி நேரடி செயல்முறை விளக்கமும், அந்த உணவுகளின் நன்மைகள் குறித்து மருத்துவர் ஒருவர் நேரடி விளக்கமளிக்க இருக்கிறார்.

சமையல் நிகழ்ச்சி என்றாலே அது ஸ்டுடியோவில்தான் என்ற ட்ரெண்ட்டை மாற்றியவர் செஃப் ஜேக்கப். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா என்ன ருசி சமையல் நிகழ்ச்சியின் சிறப்பம்சமே அவுட்டோரில் சமையல் செய்வதுதான்.

வெண்டைக்காய், கத்தரிக்காய், மக்காச்சோளம் என எந்த பொருளை சமைத்தாலும் காய்கறித் தோட்டங்களில் இருந்து புதிதாக பறித்து சமைப்பது ஜேக்கப்பின் ஸ்பெசல். சனிக்கிழமை மதியம் ஒரு மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கும் சமைக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் சிறுவர்களுக்கும் சமைக்க கற்றும் தருகிறார் சமையல் கலை நிபுணர் ஜேக்கப்.

இவரது நிகழ்ச்சிக்கான முன்னோட்டமே அதை பார்க்க தூண்டும் வகையில் அமைந்திருக்கும். வரும் வாரம் கொட்டும் மழையில் அசைவ உணவு செய்து காண்பிக்க இருக்கிறார். சமையல் ஆர்வலர்கள் பார்த்து ரசிக்கலாம்.

Topics: சின்னத்திரை, serials, television, sun tv
English summary
Sun tv Cooking program Aaha Enna RuchiCookery show. Chef Jacob Sahaya Kumar hosts the program.

Tamil Photos

Go to : More Photos