»   »  பொம்மலாட்டம் பாரதியின் வாழ்க்கை என்னவாகும்? சன் டிவி ரசிகர்களின் எதிர்பார்ப்பு

பொம்மலாட்டம் பாரதியின் வாழ்க்கை என்னவாகும்? சன் டிவி ரசிகர்களின் எதிர்பார்ப்பு

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை தாண்டி இல்லத்தரசிகளின் ஆதரவோடு வெற்றி நடை போட்டு வரும் பொம்மலாட்டம் சீரியல் இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சித்தப்பா நடராஜனின் வில்லத்தனம், தங்கை மாலதியின் வில்லத்தனத்தால் பாரதியின் வாழ்க்கை ஊசலாடி வருகிறது.

பொம்மலாட்டம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நேரம் காலை 11.30 மணி. மதிய உணவிற்கு இல்லத்தரசிகள் காய் நறுக்கும் நேரம் எனவே எந்த வித தடங்கலும் இன்றி டிஆர்பியின் ஹிட் அடித்து வருகிறது இந்த தொடர்.

தொழிலதிபர் சிதம்பரம் வீட்டு மருமகள் பாரதி கணவன் சந்தோஷ் உடன் ஏற்பட்ட பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி தன் தாய் வீட்டிற்குள் வர அதற்காகவே காத்திருந்த மாலதியின் சந்தோசம் அதிகரிக்கிறது. ஆனால் அந்த சந்தோசம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நடராஜன் மீண்டும் அண்ணனிடம் சென்டிமெண்ட் ஆக பேசி வீட்டிற்குள் வர முயற்சி செய்கிறான் அதனால் மாலதி அதிர்ச்சியடைகிறாள். மாலதிக்கும் நடராஜுக்கும் என்ன பிரச்சினை ஒரு சின்ன ப்ளாஷ்பேக் படிங்க.

பொம்மலாட்டம்

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொம்மலாட்டம் சீரியல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. கதிரும் பாரதியும் காதலிக்க, ஒரு சந்தர்பத்தில் சிதம்பரத்தின் மகன் சந்தோஷை பாரதி திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

 

 

தேவியின் கணவரான கதிர்

விதிப்பயனால் சிதம்பரம் மகள் தேவியை திருமணம் செய்து கொண்டு அவர் வீட்டு மருமகனாகிறான் கதிர். கதிரும் பாரதியும் முன்னாள் காதலர்கள் என்று பாரதியின் கணவர் சந்தோஷ்க்கும், கதிரின் மனைவி பாரதிக்கும் தெரியாது. கண்ணாமூச்சி ஆட்டத்துடனே கதை நகர்கிறது.

மாலதியின் வில்லத்தனம்

அக்கா பாரதியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்பதற்காகவே சந்தோஷின் சித்தப்பா மகன் ராஜேஷ் மீது பொய் பலாத்கார புகார் கூறி திருமணம் செய்கிறாள் மாலதி. இதனால் மல்லிகா - ராஜேஷ் திருமணம் நின்று போகிறது.

நடக்காத விசயம்

மாலதி பொய் சொல்லித்தான் திருமணம் செய்திருக்கிறாள் என்றும் பாரதியின் வீடு தண்டபாணி தன் மனைவி கோகிலாவுக்கு நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் சேர்க்க, தன் மகன் சரவணனிடம் அக்கா பாரதியிடம் சொல்ல வேண்டாம் என கூற, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் மலர் மூலம் இந்த விசயம் பாரதிக்கு தெரியவருகிறது.

 

பாரதியின் சமாதானம்

அத்தை சிவகாமியிடம் சொல்லி விட்டு அம்மாவை பார்த்து விட்டு அப்பாவுக்கு ஆறுதல் கூறி, பாரதி வெளியே வரும் போது மாலதி உள்ளே நுழைகிறாள். மகளை பார்த்து வெளியே போக சொல்லி கூப்பாடு போடும் கோகிலாவை சமாதானபடுத்தி, வெளியே போக சொல்லி தள்ளிவிடுகிறார் தந்தை தண்டபாணி

சவால் விட்ட மாலதி

தான் நினைத்தால் பாரதி - கதிரின் பழைய காதலை பற்றி சந்தோஷிடம் கூறி வாழ விடாமல் செய்ய முடியும் என சொல்லி சவால் விட்டு செல்லும் மாலதியை கண்டு தண்டபாணியும் கோகிலாவும் அதிர்ந்து போகிறார்.

தந்தையின் மரணம்

பாரதியின் முன்னால் காதலன் கதிரை கூப்பிட்டு தன் மகளை காப்பாற்ற சொல்லி காலில் விழுகிறார். தன் மனைவி கைபிடித்தபடி தண்டபாணி இறந்து போகிறார். இதுதான் கதையின் முக்கிய திருப்பமாக உள்ளது.

மாலதி மீது கோபம்

பாரதியின் காதலை சொல்லி விடுவதாக கூறி மாலதி மிரட்டியதால் தான் அப்பா இறந்து விட்டதாக பாரதியின் தம்பி சரவணன் அவரது தாய் கூறுகிறார். இதனால் தங்கை மாலதி மீது சரவணனுக்கு கோபம் வருகிறது. மாலதியை அடித்து உதைக்கிறாள் சரவணன்.

ரகசியம் தெரிந்தது

மாலதியை அடித்தது ஏன் என்று தம்பியிடம் விசாரிக்கிறாள் பாரதி, அதற்கு சரவணன், உன் மாமா முதல் அனைவரிடமும் உன்னுடைய முன்னால் காதலை சந்தோஷிடம் கூறுவதாக மாலதி மிரட்டி வாழ்வதாக கூறுகிறார். இது பாரதிக்கு இடியை இறக்குகிறது.

 

 

பாரதி - சந்தோஷ் பிரிவு

நடராஜ் தன் கூட்டாளிகளுடன் சந்தோஷை வரவழைத்து மாலதியை ஏன் சிதம்பரம் இன்னும் வீட்டை விட்டு அனுப்பவில்லை, நான் பாரதியை கொலை செய்ய ஆட்கள் அனுப்பியதை கேட்டு என்னிடம் சண்டை போட்டதை ஏன் உன்னிடம் சொல்லவில்லை ? என கேள்வி கேட்டு குழப்பி அனுப்புகிறார். இது சந்தோஷ் - பாரதி இடையே பிளவை ஏற்படுகிறது.

தாய் வீடு போகும் பாரதி

முன்னாள் காதலைப் பற்றி சந்தோஷ்க்கு தெரிந்தால் தன்னை வீட்டை விட்டு அனுப்பிவிடுவான் என்று நினைத்த பாரதி தானாகவே வீட்டை விட்டு வெளியேறி அம்மா வீட்டுக்கு செல்கிறாள். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கவலைப்படுகின்றனர்.

சந்தோஷிடம் பேசும் கதிர்

பழைய காதலை சந்தோஷிடம் சொல்லிவிடுங்கள் என்று கதிரிடம் கூறுகிறாள் பாரதி, சந்தோஷை கதிர் அழைத்து தேவி முன்னால் சொல்ல ஆரம்பிக்கும் சமயத்தில், கதிரின் தாய், ராம், சிதம்பரம், பத்ரி, என பலரும் முயற்சி செய்கின்றனர். ஆனால் தோல்வியில் முடிய கடைசியில் சிதம்பரத்துக்கு ஹார்ட் அட்டாக் என பத்ரி சொல்லவே ரகசியம் மீண்டும் வெளிப்படாமலேயே போகிறது.

சமாளித்த பாரதி

மருத்துவமனையில் இருக்கும் சிதம்பரம் மாமாவை பார்க்க வரும் பாரதியை தங்களின் வீட்டிற்கு வருமாறு அனைவரும் அழைக்க, ஆனால் வீட்டில் அம்மா தனியாக இருப்பாங்க, நான்தான் கவனிக்கனும் என்று கூறி மருத்துவமனையை விட்டு வெளியேறுகிறாள் பாரதி.

நடராஜன் எண்ட்ரீ

சிதம்பரம் வீட்டில் என்னதான் நடக்கிறது. மாலதியை ஏன் யாரும் வீட்டை விட்டு அனுப்பவில்லை? என்று சந்தேகப்பட்டு மீண்டும் வீட்டிற்குள் வர முயற்சி செய்கிறார் நடராஜன். ஆனால் யாரும் நடராஜனை மதிக்கவில்லை. அழுது ஆர்பாட்டம் செய்து ஒரு வழியாக நுழையப் போகிறாள் நடராஜன். இது மாலதிக்கு அதிர்ச்சியை தருகிறது.

பரபரப்பான திருப்பங்கள்

கதிர் - பாரதியின் காதல் சந்தோஷ் தேவிக்கு தெரியவருமா? பாரதியின் வாழ்க்கை என்னவாகும்? நடராஜனின் வில்லத்தனத்தால் மாலதி வெளியேறுவாளா? ராஜேஷ் - மல்லிகா திருமணம் நடைபெறுமா என பல கேள்விகளுக்கு விடை தரப்போகிறது பொம்மலாட்டம் தொடர்.

செல்லச் சண்டை

பொம்மலாட்டம் குடும்பத்தினர் பங்கேற்கும் சூப்பர் சேலஞ்ச் நிகழ்ச்சிக்கான படப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடராஜன் தொடங்கி வில்லி மாலதி, மல்லிகா, சிவகாமி, கதிர், சந்தோஷ், ராஜேஷ் என பலரும் பங்கேற்றனர். ஆள் ஆளுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்த போது, சந்தோஷ் - கதிர் இடையே சண்டை ஏற்பட அவர்களை பாரதி சமாதானப்படுத்த கலகலப்பாக முடிந்தது.

English summary
Sun TV Bommalattam serial crorred 1000 episode, Malathi blackmail in Bharathi Kathil love, problem for Santhos and Devi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos