twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை... சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி

    By Mayura Akilan
    |

    சென்னை: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை வெள்ளம் புரட்டிப்போட்ட நிலையில் சினிமா, சீரியல் படப்பிடிப்புகளும் கடந்த ஒருவாரமாகவே நடைபெறவில்லை. இதனால் சன்டிவியில் சில சீரியல்கள் நேற்று ஒளிபரப்பாகவில்லை. அடாது மழையிலும் விடாது சீரியல் பாக்கும் மக்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது என்றே கூறவேண்டும்.

    மழை... அடை மழை... இது விடாத மழை... இது கனமழை... பேய்மழை... என்று டி. ராஜேந்தர் பாணியில் சொல்லும் அளவிற்கு 40 மணிநேரம் கொட்டியது கனமழை. ஏரி, குளங்கள் நிரம்ப, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்க, சென்னை நகரை கபளீகரம் செய்தது வெள்ளம்.

    குடியிருப்புகளின் கீழ் பகுதிகளை வெள்ளம் மூழ்கடிக்க இரண்டாவது மாடி, மொட்டைமாடி என தஞ்சமடைந்தனர் மக்கள். டிவி, ப்ரிட்ஜ், என பல வீட்டு உபயோகப் பொருட்களை விட்டு விட்டு உடுத்திய துணியோடு வெளியேறியவர்கள் பலர். மின்சாரம் இல்லை, பால் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை என பல இல்லைகளுக்கு மத்தியில் உயிராவது மிஞ்சியதே என்று அழுதுகொண்டே வெளியேறினர் மக்கள்.

    விடாத மழையில் படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை. இதனால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சூட்டிங் முடிந்து தயாராக இருந்த பல சிரியல்களிலும் டப்பிங் பேச ஆட்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.

    தெய்வமகள் கந்தரகோலம்

    தெய்வமகள் கந்தரகோலம்

    சன் டிவியில் தெய்வமகள் தொடர் கடந்த இரண்டு தினங்களாவே நொண்டியடிக்கிறது. ஒரு எபிசோடில் விளம்பர இடைவேளை வரைதான் ஒளிபரப்பானது. அதுவும் முதல்நாள் போட்டதையே மறுநாளும் போட்டு ஒருவழியாக ஒப்பேத்தினர்.

    டப்பிங் ஆள் இல்லையே

    டப்பிங் ஆள் இல்லையே

    சீரியலில் நடிக்க ஆள் வராவிட்டால் இவருக்கு பதில் இவர் என்று போடுகின்றனர். ஆனால் டப்பிங் ஆள் மாற்றியதால் சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தின் கெத்தே கெட்டுப்போய்விட்டது என்கின்றனர் தெய்வமகள் சீரியல் ரசிகர்கள்.

    பிரியமானவள்

    பிரியமானவள்

    தொடர்ந்து பெய்து வரும் அடைமழைக்கு பிரியமானவள் தொடரில் படியில் ஏறவைத்து ஒரு விளம்பர இடைவேளை விட்டனர். அவர்களையே மெதுவாக இறங்கவைத்து எபிசோடை முடித்தனர். நேற்றோ முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். காரணம் மழைதான் என்கின்றனர்.

    வாணிராணி

    வாணிராணி

    இதேபோல சன்டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி, ஆதிரா ஆகிய சீரியல்களும் ஒளிபரப்பாகவில்லை. அதற்கு பதிலாக திரைப்படம் ஒளிபரப்பானது.

    சுடச் சுட சுட்ட விஜய் தெறி

    சுடச் சுட சுட்ட விஜய் தெறி

    கடந்த நவம்பர் மாதம் இதேபோல மூன்று நாட்கள் அடைமழை பெய்த போதும் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள், சீரியல் படப்பிடப்புகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் சண்டை காட்சிகளை லைவ் ஆக படம் பிடித்தனர். இந்த படத்தை இணையதளத்திலும் உலாவ விட்டனர்.

    செய்தி சேனல்கள்

    செய்தி சேனல்கள்

    மழை, வெள்ளத்தால் செய்தி சேனல்களின் காட்டில்தான் அடை மழை, டி.ஆர்.பி அவர்களுக்குத்தான் எகிறியுள்ளது. பள்ளி மாணவர்கள் கூட டிவியில் செய்தி சேனல்களை பார்த்தனர். புதிய தலைமுறை, ஜெயாடிவி, வேந்தர் டிவி சேனல்களுக்கும் வெள்ளம் வரவே அவர்கள் ஒளிபரப்பை நிறுத்த, பாலிமர், நியூஸ் 7, சன்நியூஸ் காட்டில் அடை மழை கொட்டியது என்றே கூறவேண்டும்.

    குடிக்க கூழ் இல்லையாம்

    குடிக்க கூழ் இல்லையாம்

    மழையில வெந்து நொந்து இருக்க உங்களுக்கு டிவி சீரியல் ரத்தானது ஒரு செய்தியா என்று கேட்கிறது காதில் விழுகிறது. மழையால் இப்படியும் ஒரு நன்மை என்று கூறவே இந்த செய்தி வாசகர்களே. என்ஜாய் பண்ணுங்க.

    English summary
    Sun TV yesterday cancelled serials including Priyamanaval, Vani Rani, telecast due to heavy and flood
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X