twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சான் தொடங்கி அனேகன் வரை… இந்தாண்டு இதுவரை 29 படங்களை அள்ளிய சன்டிவி

    By Mayura Akilan
    |

    2014ம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் பெரும்பாலான வெற்றிப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தைப் சன் டிவி பெற்றுள்ளது. இன்றைக்கு திரைப்படத்திற்கு பூஜைபோடும் போதே சேட்டிலைட் உரிமத்தை வாங்கிவிடும் சேனல்கள் இருக்கின்றன.

    சன் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி, கலைஞர் டிவி, ராஜ்டிவி, ஜீ தமிழ் டிவி என தமிழ் சேனல்களுக்கு இடையே புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தை வாங்குவதில்தான் வெட்டுக்குத்து அளவிற்கு சண்டை நடக்கிறது.

    இதில் முட்டி மோதி புதுப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தைப் பெற்றுவிடும் சேனல்கள், அதை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினத்தன்று ஒளிபரப்பி விளம்பரத்தில் கோடி கணக்கில் காசு பார்த்து பண்டிகை கொண்டாடிவிடுகின்றனர்.

    திரையரங்கு உரிமையத் தவிர தற்போது தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகை கிடைக்கக் காரணமாக இருப்பது அந்தப் படங்களின் சேட்டிலைட் தொலைக்காட்சி உரிமைகள்தான்.

    மிகப் பெரும் வெற்றி பெறும் சிறிய படங்களின் சேட்டிலைட் உரிமைகள் கூட சில கோடிகளைத் தாண்டுவது சிறிய பட்ஜெட் படங்களுக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது.

    கோடிகளில் வியாபாரம்

    கோடிகளில் வியாபாரம்

    திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமை கடந்த ஆண்டு முதல்தான் 10 கோடியை சர்வ சாதாரணமாக தொட ஆரம்பித்தது. படம் வெற்றி பெற்றால் மட்டுமே நல்ல விலை கொடுத்து வாங்குவதற்குப் போட்டி போடுவார்கள். இல்லையென்றால் அந்தப் படத்தை யாரும் சீண்டமாட்டார்கள்.

    சூப்பர்ஹிட் ஹீரோக்கள்

    சூப்பர்ஹிட் ஹீரோக்கள்

    ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய்,இவர்கள் நடிக்கும் படங்கள் என்றால் அந்தப் படங்களின் சேட்டிலைட் உரிமைகள் தற்போது பத்து கோடிக்கு மேல்தான் பேசப்படுகிறது. .

    விஸ்வரூபம் – பாண்டியநாடு

    விஸ்வரூபம் – பாண்டியநாடு

    கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம்', அஜித் நடித்த 'வீரம்', விஜய் நடித்த 'ஜில்லா', சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', விஷால் நடித்த 'பாண்டிய நாடு' ஆகிய படங்கள் பல கோடி ரூபாய் வரை விற்கப்பட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான படங்களை சன்டிவி கைப்பற்றியது.

    29 படங்கள் சன்டிவி வசம்

    29 படங்கள் சன்டிவி வசம்

    கடந்த ஆண்டினைப் போலவே இந்த ஆண்டும் பல வெற்றிப் படங்களின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்றுள்ளது. இதில் ஜில்லா, வீரம் தொடங்கி வெளிவர உள்ள அஞ்சான், அநேகன் வரை பல படங்கள் அடங்கும்.

    நிமிர்ந்து நில்

    நிமிர்ந்து நில்

    ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், சந்தானம் நடித்த இங்க என்ன சொல்லுது, வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் சன்டிவி வசமாகியுள்ளது. அதேபோல கலவரம், புலிவால், சந்திரா, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் சேட்டிலைட் உரிமத்தையும் சன்டிவி பெற்றுள்ளது.

    இது நம்ம ஆளு, வாலு

    இது நம்ம ஆளு, வாலு

    சிம்பு நடித்த வாலு, இதுநம்ம ஆளு திரைப்படங்கள் சன்டிவி வசமாகியுள்ளது. இதேபோல தனுஷ் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திக்கேயனின் டாணா ஆகிய படங்களையும் சன்டிவிதான் கைப்பற்றியுள்ளது. அதோடு பிரம்மன், விரட்டு, தெனாலிராமன் போன்ற படங்களும் சன்டிவிக்கே கிடைத்துள்ளது.

    அஞ்சான், ஐ

    அஞ்சான், ஐ

    சூர்யாவின் அஞ்சான், விக்ரமின் ஐ படங்களும் சன்டிவியில்தான் ஒளிபரப்பாகும், பிரகாஷ்ராஜின் உன்சமையல் அறையில், விஜய் ஆண்டனி நடித்த சலீம் ஆகிய படங்களும், இரும்புக்குதிரை, அமரகாவியம்,தனி ஒருவன் போன்ற படங்களையும் சன்டிவி கைப்பற்றியுள்ளது.

    கத்தி, தல 55

    கத்தி, தல 55

    இதோடு விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கத்தி, அஜீத்தின் 55வது படத்தினையும் சன்டிவி வசமாக்கியுள்ளது. கார்த்தியின் மெட்ராஸ், முனி 3 ஆகிய படங்களோடு தனுஷ் நடித்து வரும் அனேகன் படமும் சன்டிவி வசம்தான் உள்ளது. விஷாலின் பூஜை, சூர்யாவின் மாஸ் ஆகிய படங்களின் ஒளிபரப்பு உரிமத்தையும் பெற சன்டிவி போராடிவருகிறது.

    கண்டுகொள்ளப்படாத படங்கள்

    கண்டுகொள்ளப்படாத படங்கள்

    தற்போது புதிதாகத் தயாராகி வரும் பெரிய ஹீரோக்களின் படங்களை வாங்க கடும் போட்டி உள்ளது. அதேசமயம் சிறிய படங்களைக் யாரும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

    ஆதரவு தருவது யார்?

    ஆதரவு தருவது யார்?

    ஒரு பக்கம் சேட்டிலைட் உரிமைகளால் வெற்றிப் படங்கள் கோடிகளை அள்ளினாலும், தியேட்டர் கிடைக்காமல் சுருண்ட சிறிய படங்கள் பல கோடிகளை இழக்கும் நிலையும் உள்ளது. சிறிய படங்களுக்கும் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே பல சிறிய தயாரிப்பாளர்களின் கோரிக்கையாகும்.

    English summary
    Sun TV bags 29 movies including Anjaan, Ai, Anegan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X