அயய்யோ...சக்தி செத்து போயிருவாளோ?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் உதிரிப்பூக்கள் தொடர் பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இதில் கதாநாயகியாக வரும் சக்திக்கு உயிர் போகும் அளவிற்கு ஆபத்து காத்திருப்பதாக கதை நகர்வதாக ரசிகர்கள் ஆர்வத்துடன் தொடரை கவனித்து வருகின்றனர்.
உதிரிப்பூக்கள் தொடரின் மையக்கருவே காதல் திருமணம். வளர்ப்பு தந்தைக்கும் பெற்ற தந்தைக்கும் இடையே நடைபெறும் பேராட்டம் என கதை சென்று கொண்டிருக்கிறது.
அலமேலுவாக வரும் வடிவுக்கரசி தனது மகன் லட்சுமிபதி, சக்தியை காதல் திருமணம் செய்து கொண்டதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளூற உறுத்தலாகத்தான் இருக்கிறார். எனினும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. லட்சுமிபதியின் சகோதரிகளும், அவர்களின் கணவர்களும்தான் எப்படியாவது சக்தியை வீட்டை விட்டு அனுப்பிவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

மகளும் காதல் திருமணம்
இந்த சூழ்நிலையில் அலமேலுவின் கடைசி மகள் கர்ணா திடீரென காதல் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பேச்சு வரவே எரிமலையாக குமுறுகிறாள்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடி
காதல் ஜோடிகள் போலீஸ் நிலையத்திற்கு அபயம் தேடி வர, அங்கே வரவழைக்கப்பட்ட அலமேலுவோ மனதைக் கல்லாக்கிக் கொள்கிறாள். காலில் விழுந்த மகளிடம் என்னை மீறி உங்க கல்யாணம் நடந்தா அது என் பிணத்து மேல தான் நடக்கும் என்கிறாள். இதனால் பஞ்சாயத்து பண்ண இருந்த போலீஸ் குழம்புகிறது. காதல் ஜோடிகளை போலீஸ் சேர்த்து வைக்க முயற்சிக்கிறது. ஆனால் தனக்கு மகளே இல்லை என்று உதறிவிட்டு போகிறாள் அலமேலு.

மருமகள்தான் காரணம்
இந்தக்காதலுக்கு உடந்தையாக இருந்தவள் தன் மருமகள் சக்தி என அலுமேவுக்கு தெரிந்ததும் பொங்கி விட்டாள். காதலனுடன் மகள் கர்ணாவை அவ்வப்போது போனில் பேச வைத்து காதல் வளர்த்ததே சக்தி தான் என்பது தெரிந்ததும், அலமேலு ஆவேசமாகிறாள். மருமகள் சக்தியை வீட்டை விட்டு துரத்துகிறாள்.

விபத்தில் சிக்கும் சக்தி
வீட்டைவிட்டு துரத்தப்பட்ட சக்தி தன் வளர்ப்பு அப்பா சிவநேசனை சந்திக்க விரும்பாமல் கால் போன போக்கில் போகிறாள். தன்னை மறந்து அவள் போய்க் கொண்டிருக்கும் போது அவள் சாலை விபத்தில் சிக்குகிறாள்.

என்னவாகும் சக்தியின் நிலை
அவள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நேரத்திலும், அவள்அணிந்திருந்த நகைகளை மட்டும் கழற்றி எடுத்துக் கொண்டு அவளை அம்போ என விட்டு விட்டுப் போய்விடுகிறது, அங்கே வந்த கூட்டம்.
இந்நிலையில் சக்தி சாலை விபத்தில் இறந்து விட்டாள் என்ற தகவல் அலமேலு குடும்பத்துக்கு கிடைக்கிறது. அப்போது அலமேலு எடுக்கும் முடிவு என்ன?

சிவநேசன் வீட்டுக்கு வந்த பெண்
சிவநேசன் வீட்டுக்கு இப்போது மகள் என்ற பெயரில் இளம்பெண் ஒருத்தி வந்திருக்கிறாள். அந்தப்பெண்ணின் பின்னணி என்ன என்பது போன்ற சுவாரசியமான திருப்பங்கள் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

சேத்தன் வடிவுக்கரசி
இந்த தொடரில் சேத்தன், வடிவுக்கரசி, மானசா, எல்.ராஜா, ஸ்ரீலேகா, மகாலட்சுமி, ஸ்ரீதர், ரேவதிப்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். உதிரிப்பூக்களை விக்ரமாதித்யன் இயக்கியுள்ளார். ஹோம் மீடியா மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications