twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஞ்சாலி சபதம், பாண்டவர்-கவுரவர் பகை... பரபரப்பான கட்டத்தில் சன் டிவியின் மகாபாரதம்

    By Veera Kumar
    |

    சென்னை: சன் டிவி மகாபாரதம் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பாஞ்சாலி துகிலிரிதல், கண்ண பெருமாள் ஆடை அளித்தல் போன்ற முக்கிய திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் வாரா வாரம் பரபரப்பு ஏறியுள்ளது.

    சன் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகிறது மகாபாரத இதிகாச தொடர். டப்பிங் புராண நாடகங்களுக்கு மத்தியில், இது முழுக்க முழுக்க தமிழிலேயே தயாரான தொடராகும்.

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்

    சுரேஷ் கிருஷ்ணா இயக்கம்

    பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் மகாபாராதம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. உள்ளூர் கலைஞர்கள் நடித்திருந்ததால் பார்வையாளர்களுக்கு முதலில் அவ்வளவாக ஒட்டுதல் ஏற்படவில்லை. ஆனால் இப்போது ரசிகர்கள் மனதில் அந்தந்த கேரக்டர்கள் நன்கு பதிவாகிவிட்டதால் மகாபாரதம் வரவேற்பை பெற்றுள்ளது.

    வசனங்கள் செம மாஸ்

    வசனங்கள் செம மாஸ்

    குறிப்பாக, வசனங்கள் ஒவ்வொன்றும் கூர் தீட்டிய அம்புபோல மாறியுள்ளதால், பார்க்கும் ரசிகர்களை மகாபாரம் அப்படியே கட்டிப்போட்டுள்ளது. அதிலும் கடந்த சில வார எபிசோடுகளில் இதிகாசத்தின் முக்கிய நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டதால் விறுவிறுப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

    முக்கிய காட்சிகள்

    முக்கிய காட்சிகள்

    மகாபாரதத்தின் திருப்பு முனை நிகழ்வான பாண்டவர்கள்-கவுரவர்கள் சூதாட்டமும், அதைத் தொடர்ந்து பாஞ்சாலியை பணையம் வைத்து தோற்று கவுரவர்களுக்கு அடிமையாக்கும் நிகழ்வும் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகியது.

    பாரதியாரின் தாக்கமா?

    பாரதியாரின் தாக்கமா?

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பாஞ்சாலியை துச்சாதனன் துகிலிறிந்ததும், அதை பார்த்தும் பாண்டவர்களால் தடுக்க முடியாமல் வெம்பிய நிகழ்வும் ஒளிபரப்பானது. பாஞ்சாலியின் வேண்டுகோளை ஏற்று பரந்தாமன் ஆடை அளித்த நிகழ்வும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னதாக, அவையோரை பார்த்து பாஞ்சாலி கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக் வகை. அந்த காட்சியில் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் வரும் வசனங்கள் அதிகம் உபயோகிக்கப்பட்டன.

    விறுவிறுப்பு

    விறுவிறுப்பு

    சூதாடிய தனது அண்ணன் தர்மன் கைகளை எரிதழலை கொண்டு எரித்துவிட நினைப்பதாக தம்பி பீமன் பேசியதும் பாஞ்சாலி சபதத்தில் உள்ளதுதான். எனவே பாரதியின் வார்த்தைக்குறிய வேகத்தில் மகாபாரதம் இப்போது பயணிக்கிறது.

    வரும் வாரங்கள் மீது எதிர்பார்ப்பு

    வரும் வாரங்கள் மீது எதிர்பார்ப்பு

    துச்சாதனனின் ரத்தத்தை அள்ளி தனது கூந்தலில் பூசிய பிறகுதான் கூந்தலை முடிவேன் என்று பாஞ்சாலி சபதம் எடுத்துள்ள நிலையில், அடுத்தடுத்த வாரங்கள் ரசிகர்களை ஈர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

    English summary
    The epic of Mahabaratham which is telecasting in sun tv on every Sunday now gets speed as important sequences will started to happen in coming weeks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X