»   »  சத்யாவா? ஷிவன்யாவா? 2016ல் அழகில் அசத்திய சீரியல் ஹீரோயின் யார்?

சத்யாவா? ஷிவன்யாவா? 2016ல் அழகில் அசத்திய சீரியல் ஹீரோயின் யார்?

பாம்பாக இருந்தாலும் நாகினி ஷிவன்யாதான் நம்ம சாய்ஸ் என்று தமிழ் ரசிகர்கள் கூறி வர, இல்லை இல்லை எங்க சாய்ஸ் எப்பவுமோ சத்யாதான் என்கின்றனர். 2016ல் தமிழ் சீரியல்களில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோயின்களை பார்

Posted by:
Subscribe to Oneindia Tamil

காலங்கள் கடந்தாலும் சீரியல்களில் வரும் ஹீரோயின்கள் மாறப்போவதில்லை. ஒரு சீரியலில் நடித்தால் போதும் 5 ஆண்டுகளுக்கு கவலையிருக்காது. ஆயிரக்கணக்கான எபிசோடுகள் நிறைவடைந்த பின்னர்தான் சீரியல்கள் முடியும்.

சீரியல் நாயகிகளை தங்களின் குடும்பத்தில் ஒருத்தியாகவே பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். சீரியல் நாயகிகளின் உண்மை பெயரே மறந்து போய் கடைசியில் சீரியல் பெயரே நிலைத்து விடும்.

நாகினி ஷிவன்யா

இந்தி டப்பிங் சீரியல்தான் என்றாலும் இரவு 10 மணிக்கு மகுடி சத்தம் கேட்காத வீடுகளே இருக்காது. காரணம் ஷிவன்யா. கார்த்திக் உடன் ரொமான்ஸ் ஆகட்டும், பெற்றோர்களை கொன்றவர்களை பழி வாங்குவதகாட்டும் அப்ளாஸ் அள்ளுகிறார் ஷிவன்யாவாக நடிக்கும் மவுனி ராய். ஐஸ்வர்யா ராயை உச்சரித்த உதடுகள் இப்போது மவுனி ராய் பெயரை ஜெபிக்கத் தொடங்கி விட்டன.

தெய்வமகள் சத்யா

சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரின் நாயகி சத்யாவிற்கு நிறைய இளைஞர் பட்டாளங்கள் ரசிகர்களாக உள்ளன. டிவி சீரியல்கள் பார்க்காத இளசுகளை பார்க்க வைத்த வாணி போஜன், சத்யாவாகவும், லட்சுமி வந்தாச்சு தொடரில் லட்சுமியாகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

கல்யாணம் முதல் காதல்வரை பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியா பவானி சங்கர் கடந்த சில மாதங்கள் வரை இளசுகளின் உள்ளங்களை வசீகரித்தவர். திடீரென்று சீரியலில் இருந்து விலகினார் பிரியா. அவரது ரசிகர்கள்தான் மனம் ஒடிந்து போனார்கள்.

புது பிரியா வந்தார்

ஒரு பிரியா போனால் என்னஈ அதே போல அழகாய் இன்னொரு பிரியவை இறக்குமதி செய்வோம்ல என்று களமிறக்கியுள்ளது கல்யாணம் முதல் காதல்வரை குழு. இந்த பிரியவும் அழகில் அசத்துகிறார். நடிப்பும் அந்த பிரியாவிற்கு சற்றும் குறைவில்லாத ரகம்தான். இந்த பிரியா 2016 ம் ஆண்டின் புதுவரவு என்றாலும் வந்த வேகத்தில் ரசிகர்களை ஈர்த்து விட்டார் பிரியா.

பிரியமானவள் இசைப்பிரியா

பிரியமானவள் தொடரில் அவந்திகா, பூமிகா, கவிதா என 3 மருமகள்கள் இருந்தாலும், இசைப்பிரியா என்ற 4வது மருமகளின் வருகை 2016ல் புது வரவு. இசைப்பிரியாவின் துறு துறு பேச்சு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

குல தெய்வம் ஸ்ருதிகா

சன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் மலராக வந்து கவர்ந்த ஸ்ருதிகா, 5 ஆண்டுகள் மலராகவே வாழ்ந்தார். நாதஸ்வரம் தொடர் முடிந்த உடன் குலதெய்வம் தொடங்க, அலமுவாக வந்து இல்லத்தரசிகளை கவர்கிறார் ஸ்ருதிகா. அசால்டான நடிப்பு, அமைதியான பேச்சு என வந்து செல்லும் அலமுவிற்கு நாதஸ்வரத்தை விட குலதெய்வத்தில் வேலை குறைவுதான்.

சரவணன் மீனாட்சி - மீனாட்சி

சரவணன் மீனாட்சி தொடரின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனிலும் ரக்ஷிதாதான் மீனாட்சி. இரண்டாவது சீசனில் பாவாடை தாவணியில் வந்து ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த மீனாட்சி, மூன்றாவது சீசனில் மதுரைக்கார பெண்ணாக லண்டன் ரிட்டர்ன் மாடர்ன் மீனாட்சியாக வலம் வருகிறார்.

அபூர்வராகங்கள் ஸ்ருதி

சன் டிவி தென்றல் தொடரில் நடித்து ஸ்ருதியாக நடித்தவர், அபூர்வ ராகங்கள் தொடரில் வந்து அசத்தி வருகிறார் ஸ்ருதி. விஜய் டிவியில் ஆபிஸ், ஜீ தமிழ் டிவியில் அன்னக்கொடியும் 5 பெண்களும் தொடரில் வக்கீலாக நடித்து வருகிறார்.

வாணி ராணி பூஜா

சன்டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடரில் வாணியின் சின்ன மருமகளாக நடிக்கும் பூஜாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கௌதம் உடனான கொஞ்சல், மாமியார் மீதான மரியாதையை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். திருமணத்திற்கு பின்பு ஓரகத்தி டிம்பிளை சமாளிப்பதில் ஆகட்டும், குழந்தைக்காக ஏங்குவதில் ஆகட்டும் அவ்வப்போது தலைகாட்டினாலும் நடிப்பை வெளிப்படுத்துகிறார் பூஜா.

பாசமலர்கள் பாரதி

பாசமலர்கள் தொடரில் அண்ணன் தங்கைகள் பாசம் இப்போது மாமனார் மருமகள் சண்டையாக மாறியுள்ளது. பழைய நட்சத்திரங்கள் காணாமல் போய்விட்டனர். புதிய நட்சத்திரங்களுக்காக எபிசோடு அதிகரித்து விட்டது. தாமரை குடும்பம் காணாமல் போய் இப்போது பாரதி குடும்பமே பாசமலர் குடும்பமாகிவிட்டது. பாரதி புதுமுகம் என்றாலும் நடிப்பில் முதிர்ச்சி காட்டுகிறார்.

சந்திரலேகா சந்திரா

சன் டிவியில் பிற்பகல் நேரத்தில் ஓளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் சந்திராவாக நடிக்கும் ஹீரோயின் அழகு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிற்பகல் நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல் என்பதால் சந்திராவுக்கு அதிக ரசிகர்கள் இல்லத்தரசிகளே.

தலையணை பூக்கள் நிஷா

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் தலையணை பூக்கள் தொடரின் நாயகி நிஷா, டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இப்போது சீரியல் நாயகியாக நடித்து வருகிறார். சின்னத்திரையில் பார்த்த முகம்தான் என்றாலும் சீரியல் நாயகியாக அழகான தோற்றத்துடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

வம்சம் பூமிகா

ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் இப்போது பூமிகா குடும்பம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. மலைஜாதிப் பெண்ணாக நடித்த போது கோணல் கொண்டையும், புடவை கட்டும் ரசிகர்களை ஈர்த்தது. இப்போது மாடர்ன் பெண்ணாகிவிட்டார் பூமிகா. பூமிகாவின் நடிப்பு கவர்வதலேயே டாப் 5 சீரியலில் இடம் பெற்றுள்ளது வம்சம்.

English summary
here is the list of Top most beatiful actress in TV serial.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos