காதல் திருமணம் செய்ய ஆசை: மனம் திறக்கும் ரதி
ஜெயா டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தொடர் 'சித்திரம் பேசுதடி' சித்திரம் போல 5 பெண்களின் கதை. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சொல்லமறந்த கதை ரதி.
பெங்களூரு பெண்ணான ரதி, சீரியலில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்து செல்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடித்த ரதி சில வருடங்களிலேயே ஜெயா டிவியில் சீரியலுக்கு நடிக்க வந்தார். அந்த தொடர் முடிந்த உடன் காணமல் போன அவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஜெயா டிவி சீரியலுக்காகவே வந்திருக்கிறார்.
ஏன் இந்த இடைவெளி என்று விசாரித்தால் நல்ல கதைக்காக காத்திருந்ததாக கூறுகிறார். கோலங்கள் திருச்செல்வம், பொக்கிஷம், மாதவி தொடரிலேயே ரதியை அணுகியுள்ளார். அப்போது அவர் சீரியலில் பிஸியாக இருந்ததால், வாய்ப்புகளை மறுக்க நேரிட்டதாம். இப்போது சரியான நேரமும், கதையும் நன்றாக அமையவே மீண்டும் நடிக்க வந்துவிட்டாராம் ரதி.

நல்ல கதைகள்
சினிமாவில் சொல்ல மறந்த கதை படத்திற்குப் பின்னர் வேறு பிடித்தமான, நல்ல கதைகள் அமையவில்லை அதனால்தான் சினிமாவை விட்டு சீரியலுக்கு நடிக்க வந்தாராம் ரதி.

சாந்தி நிலையம்
ஜெயா டிவியில் சாந்தி நிலையம் தொடரும் ரதிக்கு நல்லப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததாம். டிவி தொடர் என்பதைத்தாண்டி ஒரு குடும்பமாக பழகினார்களாம் சாந்தி நிலையம் சீரியல் டீம்

கல்லூரி படிப்பு
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு நடிக்க வந்த ரதி சினிமா, சீரியலில் இடைவெளி ஏற்பட்ட உடன் மீண்டும் கல்லூரிக்குப் போய் படித்துவிட்டு வந்திருக்கிறார். ஜெனிடிக்ஸ் படிப்பில் இளங்கலை முடித்த அவர் மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

திருச்செல்வம் டீம்
கோலங்கள், மாதவி, பொக்கிஷம் இயக்கிய திருச்செல்வம்தான் இப்போது சித்திரம் பேசுதடி தொடரை இயக்குகிறார். இந்த கதை 5 பெண்களை சுற்றி வரும் கதையாம். பெரிய குடும்பம் என்பதால் கலகலப்பாக இருக்கிறது என்கிறார் ரதி.

பெங்களூர் பொண்ணு
ரதிக்கு தமிழகத்தில்தான் வேலை என்றாலும் பெங்களூர்தான் பிடித்த ஊராம். பிறந்த மண் பாசத்தில் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்.

காதல் கல்யாணம்
ரதி வீட்டில் எல்லோரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களாம். அதேபோல ரதியும் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார். ஆனால் இதுவரைக்கும் நல்ல பையன் கிடைக்கவில்லை என்றும் வருத்தப்படுகிறார் ரதி.


Click it and Unblock the Notifications