»   »  தெய்வமகள் சத்யா... லட்சுமி வந்தாச்சு லட்சுமி... அசத்தும் வாணி போஜன்

தெய்வமகள் சத்யா... லட்சுமி வந்தாச்சு லட்சுமி... அசத்தும் வாணி போஜன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

தெய்வமகள் சத்யா... லட்சுமி வந்தாச்சு லட்சுமி... அசத்தும் வாணி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் தைரியமான தாசில்தார். லட்சுமி வந்தாச்சு சீரியலில் நாட்டாமை குடும்பத்தின் மருமகள் என இரண்டு சீரியல்களிலும் ஹீரோயினாக நடிக்கும் வாணி போஜனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எனவேதான் வாணி போஜனைப் பற்றி தேடி தேடி படிக்கிறார்கள் ரசிகர்கள். யூடுயூப்பில் வாணி போஜன் பயோகிராபி என்று பதிவேற்றப்பட்ட வீடியோவை கூட விடாமல் 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.

வாணி போஜன் ஊட்டிப் பொண்ணு. ஆங்கில இலக்கியம் படித்து விட்டு ஆகாயத்தில் ஏர்ஹோஸ்டஸ் ஆக பணிபுரிந்த வாணி, இப்போது தெய்மகள் சத்யாவாகவும், லட்சுமி வந்தாச்சு லட்சுமியாகவும் வீடுகளுக்குள் வந்து செல்கிறார்.

அப்பா வைல்ட் லைஃப் போட்டோகிராபர். அம்மா ஹவுஸ் ஒய்ஃப். அண்ணன் ஜர்னலிஸ்ட் வீட்டிற்கு செல்லப்பெண்ணாம் வாணி போஜன். சமூக வலைத்தளங்களிலும் வாணியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

செம லுக் வாணிபோஜன்

செம லுக் வாணிபோஜன்

சீரியல்களில் வாணி அணியும் ஆடைகளுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அவருடைய ஆடைகளை அவரேதான் டிசைன் செய்து கொள்கிறாராம்.

கலர்ஃபுல்லான வேலைப்பாடுகளுடன் இருக்கும் ப்ளவுஸ் அணிந்து கொள்வது வாணிக்கு பிடிக்குமாம்.

பச்சை குத்திக்கொண்ட ரசிகைகள்

பச்சை குத்திக்கொண்ட ரசிகைகள்

வாணி போஜனுக்காகவே இன்றைக்கு பல இளைஞர்கள் சீரியல் பார்க்கின்றனராம். இதனால் சன்டிவியில் 8 மணி தெய்வமகளும், ஜீ தமிழில் 9.30 மணி லட்சுமி வந்தாச்சு சீரியலும் டிஆர்பியில் போட்டி போட்டு முந்தி வருகிறதாம். வாணியின் பெயரை பச்சைக்குத்திக்கொண்ட ரசிகைகளும் இருக்கின்றனர்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

மூடர்கூடம் படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த அழைப்பை மறுத்துவிட்டாராம். அதற்காக இப்போது வருத்தப்படுகிறாராம். இனிமேல் நல்ல வாய்ப்பு வந்தால் விடமாட்டேன் என்கிறார் வாணி.

தனுஷ் ஃபேவரைட் ஹீரோ

தனுஷ் ஃபேவரைட் ஹீரோ

தனுஷ் தான் தன்னுடைய ஃபேவரைட் ஹீரோ என்கிறார் வாணி. தனுஷ்னா அவ்ளோ இஷ்டம். மரியான் பார்வதி நடிப்பு தனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.

மண்ணின் மைந்தர்கள்

கருப்பாக, மேன்லியாக, லோக்கல் சென்னை பாஷை பேசிகிட்டு தமிழ் மண்ணுக்குச் சொந்தமான பசங்களை தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்கிறார் வாணி. கறுப்பா, களையாக இருக்கிற பசங்க வாணிக்கு அப்ளிகேசன் போடுங்கப்பா.

English summary
Deivamagal serial actress Vani Bhojan biography hit in youtube. She likes black Tamil boys.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos