twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தொகுப்பாளினிகளே கொஞ்சம் டிரஸ்ல கவனம் செலுத்துங்க!

    By Mayura Akilan
    |

    Gopinath
    தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என்றாலே உடையைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. எந்த ஒரு பணிக்கும் டிரஸ்கோடு என்று இருக்கிறது. இது தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும், செய்தி வாசிப்பாளர்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். ஆனால் இன்றைக்கு நூற்றுக்கு எண்பது சதவிகித நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் டிரஸ் கோடு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்குத்தான் இருக்கின்றனர். அதைப்பற்றி சின்னதாய் ஒரு அலசல்

    தொலைக்காட்சி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு தேர்வு செய்யும் போது அழகான தோற்றம், உச்சரிப்பு, உடை அலங்காரம் இதை எல்லாம் பார்த்துதான் தேர்வு செய்கின்றனர். ஆனால் சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் உடை அலங்காரத்தைப் பார்க்கும் போது உடனே சேனலை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் ஏற்படும். குறிப்பாக பாடல்களை மட்டுமே ஒளிபரப்பும் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் டைட் டி சர்ட், டைட் லெக்கின்ஸ் இதுதான் உடை என்றாகிவிட்டது. ஆனால் கண்ணியமாக உடை அணிந்து வந்த செய்தி சேனல்களிலேயே டைட் டிசர்ட் போட்டு செய்தி கேட்க வேண்டும் என்ற எண்ணத்தையே மாற்றிவிட்டார்கள் என்று சில நேயர்கள் புலம்புவது காதில் விழுகிறது. செய்தி வாசிப்பாளர்கள் இந்த மாதிரியான டிரஸ்போடுவதற்கு முதலில் கோடு போட்டது புதிய தலைமுறைதான்.

    இப்பொழுது மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், ஜெயா டிவியில் தேன் கிண்ணம் மற்றும் ஒரு சில சமையல் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்கள் மட்டுமே புடவை கட்டிக்கொண்டு நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக வலம் வருவது பாந்தமாக கொஞ்சம் பார்க்கலாம் போல இருக்கிறது.

    இதெல்லாம் விட ஒரு கொடுமை இந்த ஆண் தொகுப்பாளர்கள் பாடுதான் பாவம். கோட் போட்டுதான் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்க வேண்டும் என்பது எந்த சம்பிரதாயமும் இல்லை ஆனால் முதன் முதலில் டாப் 10 நிகழ்ச்சி செய்த ஜேம்ஸ்வசந்தன்தான் கோட் போட்டு கால்மேல் கால்போட்டு நிகழ்ச்சி தொகுக்கும் வேலையை தொடங்கி வைத்தார். இன்னமும் அவர் அந்த கோட்டினை கழற்றவே இல்லை போல இப்பவும் விஜய் டிவியில் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சியை கோட் சூட் போட்டுதான் நடத்துகிறார்.

    அதேபோல் நீயா நானா, நடந்தது என்ன? நடத்தும் கோபிநாத், சன் டிவியில் டாப் 10 கூறும் விஜயகுமார், பெரும்பாலான செய்திவாசிப்பாளர்களும் அக்னி நட்சத்திர வெயிலில் உருகி ஊற்றினாலும் கோட் போட்டுதான் வாசிக்கின்றனர். ஆனால் ஸ்டார் விஜய் டிவியில் சத்யமேவ ஜெயதே நடத்தும் அமீர்கான் டி சர்ட் போட்டு தொகுப்பாளர்களுக்கு உரிய பிம்பத்தையே உடைத்து எறிந்துவிட்டார் என்றே கூறலாம்.

    எனவே தொகுப்பாளர்களே, தொகுப்பாளினிகளே கொஞ்சம் இயல்பாய் இருந்தால் நிகழ்ச்சியை பார்க்கும் எங்களுக்கும் கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் என்கின்றனர். சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்தினர் கவனிப்பார்களா?

    English summary
    It is really atrocious and unbecoming to find today’s TV anchors in dress codes that are not only alien to our native culture, but also detrimental to our very sartorial tradition. Since the time we have been living, we have a tendency of calculating everything in terms of money.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X