சாரு எங்கே போயிருப்பா? கார்த்திகைப் பெண்களின் பரபரப்பு

By Mayura Akilan

சன் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகைப் பெண்கள் தொடரில் காணாமல் பன சாருவை பரபரப்பாக தேடி வருகின்றனர்.

சாருவைக் கடத்தியது அரவிந்தா? அல்லது பெரியவரின் ஆட்களா? என்று ஹாஸ்டலில் உள்ள அத்தனை பேரும் தவித்துப் போயுள்ளனர்.

போலீசில் புகார் சொன்னால் நிவியின் கடந்தகால கதை அனைத்தும் வெளிவந்து அவள் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால், சாருவைக் கண்டு பிடிக்கும் வழி தெரியாமல் தவிக்கின்றனர்.

போலீசாரின் விசாரனை

போலீசாரின் விசாரனை

இந்நிலையில் பெரியவர் ஆட்களைக் கொலை செய்தவர் யார் என்பது தெரியாமல் போலீசாரும் புலனாய்வைத் தீவிரப்படுத்துகின்றனர். இதற்காக கணபதி என்பவர் சிறப்புக்காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அவரால் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படப் போகின்றன.

சுமித்ராவினால் பிரச்சினை

சுமித்ராவினால் பிரச்சினை

சாரு இல்லாத நிலையில் ஹாஸ்டலில் இடம் கேட்டு வரும் சுமித்ரா என்ற பெண்ணுக்கு ப்யூலா, செண்பகா, ஆர்த்தி ஆகியோர் இடம் கொடுத்து விடுகின்றனர். இது எவ்வளவு பெரிய பிரச்சினைகளை உருவாக்கப் போகிறது என்பதை இனிவரும் எபிசோடுகளில் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம்.

200 வது எபிசோட்

200 வது எபிசோட்

கார்த்திகைப் பெண்கள் விரைவில் 200-வது எபிசோடை எட்டவி��ுக்கிறது. தினம் தினம் புதுபுது திருப்பங்களுடன் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார், கார்த்திகைப் பெண்கள் தொடரின் கதாசிரியரும் தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் எம்.திருமுருகன்.

சாரு உயிரோடு இருக்கிறாளா?

சாரு உயிரோடு இருக்கிறாளா?

சார��� உயிரோடு தானே இருக்கிறாள். அவளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் எங்களால் தாங்க முடியாது என்று கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தினமும் நேயர்கள் பதட்டத்தோடு விசாரிக்கிறார்கள். கதையின் சஸ்பென்சை உடைக்காமல் அவர்களை சமாதானப்படுத்துவது என்பது பெரிய சவாலாக இருக்கிறது என்கிறார், திருமுருகன்.

ஸ்ருதியின் நடிப்பில்

ஸ்ருதியின் நடிப்பில்

கார்த்திகைப் பெண்களில் கல்கி ஸ்ருதி, பானுச்சந்தர், காவ்யவர்ஷினி, ஸ்வேதா, நிமா, ஆனந்தி, எம்.ராஜேந்திரன், கே.ஆர்.செல்வராஜ், தீபா சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். தயாரிப்பு: திரு பிக்சர்ஸ் கதை, தயாரிப்பு, கிரியேட்டிவ் ஹெட்: எம்.திருமுருகன். இயக்கம்: கவி���ாபாரதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X