» 

உள்ளம் கொள்ளை போகுதடா! பாலிமர் டிவியில் காதல் தொடர்

Posted by:

இந்தித் தொடர்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பினைப் பார்த்து பெரும்பாலான சேனல்களில் தற்போது டப்பிங் தொடர்களைப் போட ஆரம்பித்துள்ளனர். விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளைத் தொடர்ந்து பாலிமர் டிவியிலும் தற்போது இந்தி தொடர்களை டப்பிங் செய்து ஒளிபரப்பி வருகின்றனர். இந்த வரிசையில் 'உள்ளம் கொள்ளை போகுதடா!' என்ற தொடர் கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் தொடங்கியுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் ஒரு ரொமான்டிக் நெடுந்தொடர். தலைப்பே கவிதையாய் அமைந்திருப்பதைப்போல கதையும் காதல் கதைதான் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள்.

காதலித்து திருமணம் செய்வது ஒருவகை, திருமணம் செய்து கொண்டு காதலிப்பது காலத்தை வென்ற காவியமாக்கும். இளமைக் காலம் முழுவதும் தன் குடும்பத்திற்காக உழைத்த ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும் போது ஏற்படும் மாற்றங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கின்றனராம்.

இந்தத் தொடருக்கான பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். ஸ்வேதா மேனன் பாடியுள்ளார்.

Read more about: polimer tv, serial, television, பாலிமர் டிவி, சீரியல், தொலைக்காட்சி
English summary
A New serial ‘Ullam Kollai Poguthada!’ telecast on Polimer TV.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos