» 

வழக்கு: தந்தி டிவியில் குற்றப்பின்னணியின் கதை

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

தந்தி டிவியில் வழக்கு என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. க்ரைம் கதைகளுக்கு தொலைக்காட்சி ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால் தந்தி டிவியும் அதே போன்ற கதைகளை தந்தி டிவியும் ஒளிபரப்புகிறது.

பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கொலையாக இருந்தாலும், தொலைதூரம் செல்லும் பஸ்சில் நடந்த பலாத்காரமாக இருந்தாலும், தந்தி டிவி ஒளிபரப்ப உள்ளது.

குற்றப் பின்னணி

தமிழகத்தின் எந்த மூலையில் ஒரு குற்றம் நடந்தாலும் அதை தந்தி டி.வி. பதிவு செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த குற்ற நிகழ்வுகளை ஆவணப்படுத்தி ‘‘வழக்கு'' என்ற பெயரில் புத்தம் புதிய நிகழ்ச்சியாக பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

மக்களுக்கு

10 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, 8 கோடி என கணக்கு காட்டப்பட்டாலும் அதை அப்படியே மக்களுக்கு சொல்வதுதான் ‘‘வழக்கு'' நிகழ்ச்சி.

செக்ஸ் டாக்டர் பிரகாஷ்

அது மட்டுமின்றி 50 வருடங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகளும் வழக்கு நிகழ்ச்சியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது செக்ஸ் டாக்டர் பிரகாஷ் மீதான வழக்கு தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது உள்பட பிரபலமான வழக்குகளை பதிவேடு பகுதியில் காணலாம்.

சந்தேகங்களுக்கு விடை

மேலும் நமது சட்டங்களை பற்றி மக்களுக்கு எவ்வளவு தூரம் தெரியும்? காவல் நிலையம் செல்வது சமீப காலமாக அன்றாடம் வேலைக்கு போவது போன்று மாறி விட்டது. உங்கள் மீது பெட்டி கேஸ் போடப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? குண்டாஸ் வழக்கை எதிர்கொள்வது எப்படி? இது போன்ற சந்தேகங்களுக்கும் விடையளிக்கும் ஒரு முழுமையான தொகுப்பாக வந்திருக்கிறது ‘வழக்கு' நிகழ்ச்சி.

தந்தி டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது, இந்த நிகழ்ச்சி.

 

Topics: thanthi tv, television, தந்தி டிவி, தொலைக்காட்சி
English summary
New Crime story program vazhakku telecast on Thanthi TV

Tamil Photos

Go to : More Photos