»   »  பாக்யராஜ் பட்டிமன்றம்.. ஆண்ட்ரியாவின் மியூசிக்.. இது வேந்தர் டிவியின் தீபாவளி ஸ்பெஷல்!

பாக்யராஜ் பட்டிமன்றம்.. ஆண்ட்ரியாவின் மியூசிக்.. இது வேந்தர் டிவியின் தீபாவளி ஸ்பெஷல்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேந்தர் டிவியில் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்காமல் என்ன தீபாவளி கொண்டாட்டம்? சேட்டிலைட் சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

வேந்தர் டிவியில் தீபாவளியை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் தலைமையில் பட்டிமன்றம், நடிகை ஆண்டிரியாவின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Vendhar TV Special Programs Diwali 2016

ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமை

தீபாவளி திருநாளின் தலைவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளை எடுத்துக் கூறுவதோடு, சென்னை இஸ்கான் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளும் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. காலை 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சிறப்பு பட்டிமன்றம்

இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் அவர்கள் நடுவராக பங்கேற்க 'பண்டிகை கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியை தருவது திருமணத்திற்கு முன்பா?திருமணத்திற்கு பின்பா? என்ற தலைப்பில் முன்னணி பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டி மன்றம் காலை 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வி. வாய்ஸ் தீபாவளி ஸ்பெஷல்

பிரமாண்ட அரங்கில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வி. வாய்ஸ் என்னும் இசைப்போட்டி தீபாவளியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

பிரபல நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா மற்றும் பிரசன்னா, நரேஷ்அய்யர் ஆகியோர் நடுவர்களாக இருக்கும் இந்த இசை நிகழ்ச்சி தீபாவளி பாடல்களோடு வெகு சுவையாக ஒளிபரப்பாகிறது. காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

வாலுப்பசங்க

பள்ளி மாணவர்களை கொண்டு வித்தியாசமான விளையாட்டுக்களால் நேயர்களை மகிழ்விக்கும் 'வாலுப்பசங்க' நிகழ்ச்சி சிறப்பு ஒளிபரப்பாக மாலை 5.00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மோதிப்பார்

வேந்தர் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இனிமையான கிராமத்து சூழலில் கலகலப்பான போட்டிகளில் கலக்கும் 'மோதிப்பார்' நிகழ்ச்சி பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இது எங்க ஏரியா

பிரபல சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் சுவாரஸ்யமான போட்டிகள் 'இது எங்க ஏரியா'பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தீபாவளி பண்டிகையை வேந்தர் டிவியுடன் கொண்டாடுங்கள் என்று அழைக்கின்றனர்.

English summary
Vendhar TV will telecast Special programs on Deepavali. K.Bhagyaraj pattimandram and Andrea music program.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos