twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிராமத்து காதல் கதை… மண் மணம் மாறாத ஆண்டாள் அழகர்

    By Mayura Akilan
    |

    கலகலப்பாக இருக்கிறது ஆண்டாள் அழகர் சூட்டிங் ஸ்பாட். அத்தை மகன், மாமன் மகள் காதல் எல்லாம் கிராமங்களில் பிரபலம். கிராமத்து காதல் கதையை மண் மணம் மாறாமல் விஜய் டிவியில் கொடுத்து சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆண்டாள் அழகர் தொடரின் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன்.

    தாயுமானவன் தொடரில் தந்தையில் பாசத்தை உணர்த்திய இயக்குநர், ஆண்டாள் அழகரில் அண்ணன், தங்கை, அக்காள், தம்பி என்ற பாசப்பிணைப்பு, நட்பு, இரண்டு குடும்பங்களுக்கு இடையே உள்ள பகை, என அனைத்தையும் மண் மணம் மாறாமல் விளக்கியுள்ளார்.

    குடும்ப பகை

    குடும்ப பகை

    இந்தியா - பாகிஸ்தான் போல எப்போதும் எதிரும் புதிருமாக இருக்கும் கலெக்டர் குடும்பம், கவுன்சிலர் குடும்பத்திற்கு இடையேயான சண்டை தலைமுறையை தாண்டியும் நீடிக்கிறது. இதற்குக் காரணம் காதல் திருமணம்தான். இந்த இரு குடும்பத்திலும் வாரிசுகளான சக்திவேல் - அழகர் இடையேயான நட்பு சொந்தம் என்பதைத்தாண்டி நீடிக்கிறது.

    ஆண்டாள் – அழகர்

    ஆண்டாள் – அழகர்

    சக்திவேலின் தங்கை ஆண்டாள் மீது அழகருக்கு ஏற்படும் காதல் கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. டாக்டருக்கு படித்திருக்கும் ஆண்டாளுக்கும் அழகர் மீது காதல் ஏற்பட நட்புக்காக காதலை மறைக்கும் நிலை ஏற்படுகிறது.

    திடீர் திருமணம்

    திடீர் திருமணம்

    எதிர்பாராத தருணத்தில் ஆண்டாளுக்கும் அழகருக்கும் இடையே திருமணம் நடைபெற, கோபத்தில் அழகரின் அக்கா ரேவதியை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்கிறான் சக்திவேல்.

    ஆகாத மருமகள்கள்

    ஆகாத மருமகள்கள்

    இருவர் வீட்டிலும் ஆகாத மருமகள்களாக நுழைகின்றனர் ஆண்டாளும், ரேவதியும். சக்திவேலுடன் பிடிக்காமல் வாழ்ந்தாலும், எப்படியாவது கணவனை பெரியாளாக மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் சீண்டுகிறாள் ரேவதி. அதேபோல ஆண்டாளும் அழகருடன் சந்தோசமாக வாழும் தருணத்தில் எதிர்பாரத சிக்கல்கள் ஏற்பட இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்படுகிறது.

    அடுத்தது என்ன?

    அடுத்தது என்ன?

    சுவாரஸ்யமாக செல்லும் ஆண்டாள் அழகர் தொடரில் அடுத்து நடக்க இருப்பது எதிர்பாராத திருப்பம் என்கிறார் இயக்குநர் பிரான்சிஸ் கதிரவன். சிறந்த டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவை ஆண்டாள் எப்படி நிஜமாக்குகிறாள்? அதேபோல தன்னுடைய கலெக்டர் கனவை மாமனார் வீட்டில் இருந்து கொண்டு ரேவதி நிஜமாக்குவது எப்படி என்பதுதான் இனி சீரியலின் கதை என்கிறார்.

    வக்கீலாகும் அழகர்

    வக்கீலாகும் அழகர்

    படிக்காமல் ஊரைச்சுற்றிக்கொண்டிருந்த அழகரை படிக்க வைத்து சிறந்த வழக்கறிஞராக மாற்றுகிறாள் ஆண்டாள். படிப்படியாக தனது மாமனார் வீட்டிலும் நல்ல பெயரை சம்பாதிக்கிறாள்.

    சிறந்த டாக்டர்

    சிறந்த டாக்டர்

    கிராமத்தில் ஒரு மருத்துவமனை தொடங்கி மக்களுக்கு சேவை செய்து சிறந்த டாக்டர் என்று பெயரெடுத்து பெற்றோருக்கும் சிறந்த மகளாக பெயரை சம்பாதித்து கொடுக்கிறாள் ஆண்டாள்.

    கலெக்டராகும் ரேவதி

    கலெக்டராகும் ரேவதி

    அதேபோல மாமனார் உதவியோடு கலெக்டர் ஆகும் ரேவதி, தனது கணவன் சக்திவேலை சிறந்த அரசியல்வாதியாக மாற்றுவதோடு, அமைச்சர் அளவிற்கு உயர்த்துகிறாள்.

    நட்பும் காதலும்

    நட்பும் காதலும்

    திருமணத்திற்குப் பின்னர் பிரிந்து எதிரும் புதிருமாக இருக்கும் நண்பர்கள் சக்திவேலும் அழகரும் இணைந்தார்களா? கலெக்டர் குடும்பமும், கவுன்சிலர் குடும்பமும் ஒன்றாக இணைந்தார்களா என்பதுதான் பரபரப்பான திருப்பம் என்கிறார் பிரான்சிஸ் கதிரவன்.

    English summary
    Andal Azhagar - A story about a clash between two families, where their bond is broken and it is unable to mend together. Love and enmity that occurs changes their plans that has been set forth in their lives.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X