»   »  பெண்களின் சாதனைகளை அடையாளம் காட்டும் விதமாக ஸ்ரீ சங்கரா டிவி

பெண்களின் சாதனைகளை அடையாளம் காட்டும் விதமாக ஸ்ரீ சங்கரா டிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய பெண்களின் சாதனைகளை அடையாளம் காட்டும் விதமாக ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 'உமன்ஸ் வேர்ல்டு' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் இல்லாத துறையும் இல்லை! பெண்கள் சாதிக்காத இடமும் இல்லை. இன்றைய பெண்கள் எல்லா துறையிலுமே வெற்றிக் கொடி நாட்டுகின்றனர். தனக்கு தானே புதிய பாதையை வகுக்கும் அவர்களின் தனி திறமை நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டிருக்கிறது.

Women’s World on Sri Sankara TV

மகளிர் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சமையல் நிகழ்ச்சி, கலை மற்றும் கைவினை நிகழ்ச்சி ,டாக்டர் பிரிவில் (ஹலோ டாக்டர்) மற்றும் பெண்ணே பெண்ணே நிகழ்ச்சிகளை ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி பெண் திறமையாளர்களை ஊக்குவித்து ஒளிபரப்பப்படுகிறது .

Women’s World on Sri Sankara TV

பெண்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, பல துறைகளில் நிருபித்துக்காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய பெண்களின் சாதனைகளை அடையாளம் காட்டும் விதமாக ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 'உமன்ஸ் வேர்ல்டு' Women's World நிகழ்ச்சி மக்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Women’s World on Sri Sankara TV

இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை பகல் 12:30 மணி முதல் 1:00 மணி வரை ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவர் சாதனா சங்கர் .

English summary
Women's world on Sri Sankara TV programe host on Sathana Sankar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos