சென்னை: தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக என்ட்ரி கொடுத்து, இன்று மாஸ் இயக்குநர், மிரட்டல் வில்லன், மல்டி-டேலண்டெட் நடிகராக வலம் வரும் அந்த 58 வயது பிரபலம், இன்னும் திருமணம் செய்யாமல் 'சிங்கிளாக' சுற்றி வருவதன் பின்னணியில் இருக்கும் அதிரடி ரகசியங்களை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் புட்டு புட்டு வைத்துள்ளார்.

Advertisement

150 கோடி சொத்து: சினிமாவில் நடிப்பு, இயக்கம், இசை என சகல கலைகளையும் கற்றறிந்த அந்த பன்முக நடிகருக்கு தற்போது 58 வயதாகிறது. சென்னையில் இரண்டு ஆடம்பர பங்களாக்கள், சொந்த ஊரில் அரண்மனை போன்ற வீடு, ஆடி கார் என கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய்க்குச் சொத்து வைத்து இருக்கிறார். இவ்வளவு சொத்தையும் வச்சுக்கிட்டு யாருக்காக வாழப் போறாரு? இதற்கு மேல் அவர் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.

Advertisement

லவ் புரபோசல்: அந்த நடிகர் திருமணம் செய்யாமல் இருப்பதற்குப் பின்னால் ஒரு பெரிய சோகமும் இருக்கிறதாம். சினிமாவில் தனக்கு ஜோடியாக நடித்த இரண்டு மூன்று முன்னணி நடிகைகளிடம் அவர் காதலைச் சொல்லி வலையை வீசியுள்ளார். ஆனால், அந்த நடிகைகளோ கொஞ்சமும் யோசிக்காமல், ஐயோ சார்... நீங்க எனக்கு அப்பா மாதிரி.. உங்க வயசு என்ன என் வயசு என்ன என்று சொல்லி ஒரே அடியாக அவரது காதலை நிராகரித்து முகத்தில் கரியைப் பூசிவிட்டார்களாம். 58 வயதிலும் திருமணம் தள்ளிப் போவதற்கு இந்த அப்பா மேட்டர் தான் முக்கியக் காரணம்.

Advertisement

ஷூட்டிங் ஸ்பாட்டில் கைவரிசை: மேலும் அந்த நடிகர் பற்றி பேசிய அந்த பத்திரிகையாளர், திருமணம் தான் ஆகவில்லையே தவிர, கட்ட பிரம்மச்சாரி என்று சொல்லிவிட முடியாது. அவர் மீது ஏகப்பட்ட கிசுகிசுகள் இருக்கு.... படப்பிடிப்பு தளத்திற்கு வரும் புதுமுக நடிகைகளிடம் இடுப்பைக் கிள்ளுவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது எனச் சகல லீலைகளிலும் அவர் கைதேர்ந்தவராம். வெளியே ரொம்ப நல்லவர் போலக் காட்டும் அந்த நடிகருக்குள் இப்படி ஒரு கருப்புப் பக்கம் இருக்கு என அந்த பத்திரிக்கையாளர் எல்லாத்தையும் ஒரே அடியாக போட்டு உடைத்துள்ளார்.