சென்னை: சினிமா உலகில் படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சின்னச் சின்ன உரசல்கள் பல நேரங்களில் வெளியே தெரியாமல் போய்விடும். ஆனால் சில சம்பவங்கள் மட்டும் தயாரிப்பாளர்களுக்கு தூக்கமே கெடுக்கும் அளவுக்கு பெரிதாக மாறிவிடுகின்றன. அப்படித்தான் தற்போது கோலிவுட்டில் ஒரு புதிய கிசுகிசு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
முன்னணி நடிகர் ஒருவருடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள இளம் நடிகை ஒருவர், படப்பிடிப்பு தளத்தில் நடிகரின் எல்லை மீறிய நடத்தையால் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்த நடிகை, சம்பவங்கள் தொடர்ந்து நடந்ததாகக் கூறி, இனி அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தாராம்.
இதனால், படக்குழுவினரிடமும் தனது நெருங்கிய வட்டாரத்தினரிடமும் நடந்த விஷயங்களை பகிர்ந்து கொண்ட நடிகை, தேவைப்பட்டால் வெளிப்படையாக ஊடகங்களில் பேசவும் தயார் எனக் கூறியதாக தகவல். இந்த தகவல் தயாரிப்பாளர் காதுக்குச் சென்றதும், அவர் உடனடியாக நடிகையை தனியாக சந்தித்துப் பேசியதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
பதறிய தயாரிப்பாளர்: "இப்போது இந்த விஷயம் வெளியே போய்விட்டால், படத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். பல கோடி ரூபாய் கடன் வாங்கித்தான் இந்த படத்தை எடுத்து வருகிறேன். படம் வெளியாகி வசூல் செய்தால்தான் அந்தக் கடனையும் வட்டியையும் அடைக்க முடியும். இப்போது சர்ச்சை வெடித்தால் படமே பாதிக்கப்படும். என் குடும்பமும் பெரும் சிக்கலில் சிக்கிவிடும். தயவுசெய்து படப்பிடிப்பை முடித்துக் கொடுங்கள். படம் வெளியான பிறகு நீங்கள் எதை வேண்டுமானாலும் சட்டப்படி பேசலாம்," என்று தயாரிப்பாளர் உருக்கமாக கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. கப் சிப் ஆன பிரச்னை: தயாரிப்பாளரின் நிலையைப் புரிந்து கொண்ட நடிகையும், தற்போது எந்த கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்காமல் அமைதியாக இருக்க சம்மதித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் பெரிதாக வெடிக்க இருந்த சர்ச்சை தற்காலிகமாக அடங்கியிருப்பதாகவும், படம் வெளியாகும் வரை இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வராமல் இருக்க இரு தரப்பும் முடிவு செய்திருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், படம் வெளியான பிறகு நடிகை அமைதியைத் தொடர்வாரா? அல்லது இதுவரை நடந்த சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவாரா? என்பதே தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் கேள்வியாக மாறியுள்ளது.More Articles