சென்னை: சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதை விட, கிடைத்த வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொள்வதுதான் பெரிய விஷயம் என்பார்கள். ஆனால், முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த ஒரு இளம் நடிகை, தயாரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரின் பேச்சை முழுமையாக நம்பி எடுத்த முடிவுதான் இப்போது அவருக்கே பெரிய வருத்தத்தை கொடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
சமீபத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான ஒரு படத்தில் நடித்த அந்த நடிகைக்கு, அதன்பிறகு பல தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், "இனி உன் கேரியரை நானே பார்த்துக்கொள்கிறேன். பெரிய ஹீரோக்களுடன் மட்டும்தான் உன்னை நடிக்க வைப்போம். வேறு யாரிடமும் கதை கேட்காதே" என்று தயாரிப்பாளர் மகன் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நம்பி, வந்த பல வாய்ப்புகளையும் நடிகை தவறவிட்டாராம்.
முதலில் எல்லாமே திட்டமிட்டபடி நடப்பது போல இருந்ததாம். அடிக்கடி மீட்டிங், புதிய கதைகள், பெரிய இயக்குநர்கள் என பேச்சுகள் ஓடியதாம். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த வாக்குறுதிகள் எல்லாமே காற்றில் கரைந்துவிட்டதாம். சொல்லப்பட்ட படங்கள் எதுவும் தொடங்கவில்லை. புதிய வாய்ப்புகளும் கைக்கு வரவில்லை.
ஏமாறிய நடிகை: இதற்கிடையில், நடிகையை நம்ப வைத்து இருந்தவர் வேறு படங்களிலும், வேறு வேலைகளிலும் பிஸியாகிவிட்டாராம். ஆரம்பத்தில் தினமும் தொடர்பில் இருந்தவர், இப்போது போன் அழைப்புக்குக்கூட சரியாக பதில் சொல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புலம்பல்: இதனால் கடும் அப்செட்டில் இருக்கும் நடிகை, "அப்போது வந்த வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லாமல் இருந்திருந்தால், இன்றைக்கு நிலைமையே வேறாக இருந்திருக்கும்" என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம். இனிமேல் நடிகை எடுத்திருக்கும் முடிவு: இதையடுத்து, இனிமேல் யாருடைய வாக்குறுதியையும் முழுமையாக நம்பாமல், கதை பிடித்தால் உடனே ஓகே சொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு நடிகை வந்துவிட்டதாகவும், மீண்டும் தனது கேரியரை புதிதாக கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.More Articles