காசுக்காக இப்படியா செய்வது?: நடிகையை பார்த்து சிரிப்பாய் சிரிக்கும் கோலிவுட்


சென்னை: ஆடையில்லாமல் நடித்துள்ள நடிகை ஒருவரை பார்த்து தான் கோடம்பாக்கமே சிரிக்கிறதாம்.

கணவரை பிரிந்த நடிகை ஒருவர் ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த போஸ்டர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. காரணம் நடிகையின் அதீத கவர்ச்சி.

கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டதால் அப்படி நடித்ததாக நடிகை அளித்த விளக்கத்தை நம்ப யாரும் தயாராக இல்லை.

பணம்

அடக்கி வாசித்துக் கொண்டிருந்த நடிகை திடீர் என்று இப்படி போஸ் கொடுத்ததற்கு காரணம் காசு பணம் துட்டு மணி மணி என்பது தெரிய வந்துள்ளது. அதாவது கூடுதல் பணம் கொடுத்துள்ளதால் ஆடைக்கு விடுமுறை விட்டுவிட்டாராம் நடிகை. அவர் ஆடை, அவர் விடுமுறை விடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் பணத்திற்காக இந்த அளவுக்கு இறங்கிவிட்டாரே என்று கோலிவுட்காரர்கள் சிரிக்கிறார்கள்.

இயக்குனர்

நல்ல காலம் அந்த தம்பி தப்பிச்சுட்டான் என்று நடிகையின் முன்னாள் கணவரை பற்றியும் பேசுகிறார்கள். அந்த மனுஷன் பாவம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார். இந்த ஆடைக்கே அசந்து போனால் எப்படி?. அம்மணி பாலிவுட் இயக்குனர்களுக்காக படுகவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பிக் கொண்டிருக்கிறாராம். அதெல்லாம் கசிந்தால் நிலவரம் எப்படி இருக்குமோ?

ஆடை

ஹிட் அடித்தால் சம்பளத்தை கூட்டும் பாணி போய் ஆடையை குறைத்தால் சம்பளத்தை கூட்டும் புது பாணியை உருவாக்கியுள்ளார் நடிகை. இது பாலிவுட்டில் சகஜம் என்றாலும் கோலிவுட்டில் கொஞ்சம் புதுசு தான். போஸ்டரை பார்ப்பவர்களுக்கு அவரின் கதறல் தெரியவில்லை, காயங்கள் தெரியவில்லை. அவர் தனது உடம்பில் சுற்றியுள்ள டாய்லெட் பேப்பர் தான் தெரிகிறது. அதனால் தான் இத்தனை விமர்சனம் எழுந்துள்ளது.

கோலிவுட்

கணவரை பிரிந்த பிறகு நடிகை கவர்ச்சியாக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். அதை பார்த்தவர்கள் அவரை விளாசினார்கள். என் உடம்பு, என் உடை, என் இஷ்டம் போன்று தான் இருப்பேன் என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்தார். தற்போது கோலிவுட்டே அவரை பார்த்து சிரிக்கிறது, என்ன பதில் சொல்லப் போகிறாரோ?

Have a great day!
Read more...

English Summary

Kollywood people are making fun of a young actress who takes glamour quotient to next level for extra payment.