சென்னை: இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வரும் அந்த பிரபலம், சமீபத்தில் தனது திரைப்பயணத்தின் உச்சகட்ட சாதனையை அடைந்தார். தொழில் வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறினாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விவாகரத்து சம்பவம் தான் இன்னமும் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது.
தோழியை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன என்று தெரியாததால், சினிமா பிரபலர் ஒருவர் பகீர் தகவலை கூறியுள்ளார்.
குடும்ப சண்டை: அந்த இசையமைப்பாளர், தனது தந்தை மற்றும் நடிகையாக இருக்கும் தனது சொந்த தங்கையுடன் தான் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துள்ளார். ஆனால், நாளடைவில் கணவரின் தங்கைக்கும், மனைவிக்குமிடையே குடும்ப வந்துள்ளது. பிளேபாய்: இதுமட்டுமில்லையாம், இசையமைப்பாளராக இருந்தவரை வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அமைதியாகத் தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், ஹீரோவாக அவதாரமெடுத்துக் களம் இறங்கியதுதான் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். ஹீரோவான பிறகு, தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி நடித்தது மனைவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். குறிப்பாக, ஒரு அடல்ட் காமெடி திரைப்படத்தில் 'பிளேபாய்' கதாபாத்திரத்தில் நடித்த அந்த நடிகர், படப்பிடிப்பில் ஒரு இளம் நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து இருக்கிறார். முத்தக்காட்சி: இந்த காட்சி மட்டும் 36 ரீ-டேக்காம், விஷயம் காதுக்கு மனைவி காதுக்கு வந்ததும், சினிமாவுக்காக நடிக்கிறீங்களா... இல்ல நிஜமாவே என்ஜாய் பண்றீங்களா? என வீட்டில் சண்டை வெடித்துள்ளது. அன்று அந்த முத்தக் காட்சியில் தொடங்கிய சின்ன சலசலப்பு, போகப் போக குடும்பத் தகராறாக உருவெடுத்து, இறுதியில் அது நீதிமன்றப்படி ஏறி விவாகரத்திலேயே முடிந்துவிட்டது என அந்த சினிமா பிரபலம் பல நாள் ரகசியத்தை உணடைத்து பேசி உள்ளார்.
இதனால் மனமுடைந்த மனைவி, நாம தனிக்குடித்தனம் சென்றுவிடலாம் என பலமுறை கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால், தனது குடும்பத்தை விட்டு வர அந்த பிரபலத்திற்குச் விருப்பமில்லையாம், இதுவே இருவருக்குள் மன விரிசலை ஏற்படுத்தி உள்ளது.More Articles