சென்னை: தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டு புகழ்பெற்ற அந்த முன்னணி மாஸ் நடிகர், திடீரென பக்கா அரசியல்வாதி கெட்டப்பில் தோன்றிப் பேசிய பேச்சு, தற்போது சினிமா வட்டாரத்தில் மட்டுமில்லாமல் அரசியல் மேடைகளிலும் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது.

Advertisement

எரியும் அரசியல் ஆசை: வழக்கமாகத் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்களில் படு அமைதியாகவும், தத்துவமாகவும் பேசி அடக்கி வாசிக்கும் அந்த அந்த நடிகர், அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சு மொத்தப் பேரையும் மூக்கில் விரலை வைக்க வைத்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்த ஒரு டாப் நடிகர், மக்கள் இயக்கத்தை ஆரம்பிச்சு, அப்புறம் அரசியல் கட்சி தொடங்கி, இன்னைக்குத் தமிழ்நாடே வியக்கும் அளவுக்கு மாபெரும் அரசியல் தலைவரா மாறிட்டாரு. சினிமா நடிகர்கள் எல்லாம் ஜெயிக்க முடியுமா? அப்படின்னு கேட்டவங்க கண்ணு முன்னாடியே அதைச் செஞ்சு காட்டியிருக்காரு. அந்த டாப் நடிகர் கொடுத்த தைரியத்தில்தான், தற்போது இந்த நடிகருக்குள்ளும் அரசியல் ஆசை துளிர்விடத் தொடங்கி இருக்கு.

புலம்பும் மனைவி': ஒரு காலகட்டத்தில் அரசியலுக்கு வாங்க... வாங்க... என ஒட்டுமொத்தத் நாடும் அழைத்தும், எனக்கு இதில் ஈடுபாடு இல்லை என ஒதுங்கிவிட்டார் அந்த மூத்த நட்சத்திர நடிகர். ஆனால், இப்போது தமிழ்நாட்டில் நடந்துள்ள அரசியல் மாற்றங்களைப் பார்த்த அந்த நட்சத்திர நடிகரின் மனைவி, அன்னைக்கே வந்திருக்கலாம் சதா அவரிடம் என புலம்பி வருகிறாராம். அதுமட்டுமில்லாமல், அந்த ஏக்கத்தைப் போக்கவே புதிதாக ஒரு இயக்கத்தைத் தொடங்கி, அரசியல் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளாராம். வரவிருக்கும் தேர்தலில் இந்த இயக்கத்தை அப்படியே கட்சியாக மாற்றி களமிறக்கிவிடலாம் என்பதுதான் அவருடைய மாஸ்டர் பிளான்.

Advertisement

எக்ஸ் மருமகன்: ஒரு பக்கம் எக்ஸ் மாமியார் காயை இப்படி நகர்த்திக்கொண்டு இருக்க, அதே எண்ணத்தோடுதான், அந்த ஸ்டார் நடிகரின் 'எக்ஸ்' மருமகனும் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் தனது நற்பணி மன்றத்திற்கு ஒரு புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கொடியைப் பார்த்த ரசிகர்கள் இது என்னடா பக்கா அரசியல் கட்சி கொடி மாதிரி இருக்கே? எனப் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், கொடியைப் பற்றி எங்குமே மூச்சுவிடாத அந்த நடிகர், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வழக்கமான கேஷுவல் உடையில் வராமல், பக்கா வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கண்ணாடி என அசல் அரசியல் தலைவர் போன்ற கெட்டப்பில்தான் விழா மேடைக்கு வந்துள்ளார்.

Advertisement

பாசமழை : அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி முடிந்ததும் பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்களிடம் சொல்வது போல, எல்லாரும் பார்த்துப் பத்திரமா வீட்டுக்குப் போங்க... குடும்பம்தான் முக்கியம் எனப் பாசமழை பொழிந்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் நற்பணி மன்றத்தை வலுப்படுத்தி, கொடியையும் அறிமுகப்படுத்தி, மேடைகளில் அரசியல் கணக்குகளைப் போட்டு காய்களை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார். மாஸ் நடிகரின் பேச்சு மற்றும் கேட்டப்பை பார்த்த ரசிகர்கள் அவர் மனதிலும் அரசியல் ஆசை வந்துவிட்டது என கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளன.