சென்னை: வெற்றிப் படங்களை கொடுக்கும் இயக்குநர்களை மட்டுமே நம்பி தன்னை ஒப்படைக்க அந்த ஒல்லி நடிகர் முடிவு செய்துவிட்டாராம். அப்படி இல்லை என்றால் தானே தன்னை செதுக்கத் தேவையான வேலைகளில் ஈடுபடவும் ரெடியாக உள்ளார் என்கின்றனர்.

Advertisement

டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய இயக்குநரை பாஸ் நடிகர் ஏன் விரட்டி விட்டாரோ அந்த காரணம் தெரிந்து தான் அந்த டைரக்டரை கிட்டவே சேர்க்க வேண்டாம் என்கிற முடிவுக்கு ஒல்லி நடிகர் வந்து விட்டார் என்கின்றனர்.

Advertisement

இதற்கிடையே பிரைட் நடிகர் தேவையில்லாமல் தலையை கொடுக்க முடிவு செய்து விட்டார் என்றும் அவரை சினிமா வட்டாரத்திலேயே சிலர் வேண்டாம் என அலர்ட் செய்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஒன்லி ஹிட் டைரக்டர்கள்: அறிமுக இயக்குநர்களை எல்லாம் நம்பி படம் பண்ண முடியாது என்றும் பெரிய நடிகர்களை வைத்து படமே எடுத்தாலும் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களை மட்டுமே நம்பி ஒல்லி நடிகர் களமிறங்கி வருவதாகவும் அது தான் அவரது ஒன்லி ஐடியா என்றும் கூறுகின்றனர். ஒல்லி நடிகரை எப்படியாவது ஓகே செய்து விடலாம் என நினைத்த லாஸ்ட் பட டைரக்டருக்கு கல்தா கொடுக்க முக்கிய காரணம் உள்ளது என்கின்றனர்.

Advertisement

ரிப்போர்ட் தெரிஞ்சிடுச்சு: ஏற்கனவே லீக்கான படத்தை பார்த்த நடிகரின் டீம் அலர்ட் செய்த நிலையில் தான் அடுத்து இந்த இயக்குநர் வேண்டாம் என்றும் வழக்கம் போல தனது ஹிட் இயக்குநரை வைத்தே இன்னொரு படத்தையும் எடுத்து விடலாம் என்கிற முடிவுடன் தான் லாஸ்ட் பட டைரக்டருக்கு டாட்டா சொல்லிவிட்டார் ஒல்லி நடிகர் என்கின்றனர்.

தண்டச் செலவு: பெரிய நடிகர்கள் படங்கள் என்றதுமே ஆப்பிரிகா, அண்டார்டிகா என லொகேஷனை இழுத்து விட்டு தண்டச் செலவு செய்வதில் மட்டுமே அந்த டைரக்டர் குறியாக உள்ளார் என்றும் நான் ஏதோ கிராமத்தில் ஒரு ஹாலிவுட் படம் பண்ணி சிறு பட்ஜெட்டில் படம் எடுத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறேன், எனக்கு எதுக்குப்பா தேவையில்லாத பொல்லாப்பு என அந்த நடிகர் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

Advertisement

பிரைட் நடிகர் சிக்குவாரா?: ஏற்கனவே ஸ்டார் நடிகரை வைத்து ஒரு பிரபல இயக்குநர் ஃபர்னிச்சரை உடைத்த பிறகு அவரிடம் சரக்கு இல்லை என அனுப்பி வைத்து விட்டனர். இந்நிலையில், பிரைட் நடிகர் தானாக சென்று தலையை கொடுக்க வேண்டாம் என சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.