சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அந்த ஹீரோவும், தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் அந்த நடிகையும் பற்றிய கிசுகிசுதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் இணைந்து நடித்த ஒரு படம் மூலம் தொடங்கிய நட்பு, இப்போது சினிமா வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பும் அளவுக்கு வளர்ந்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement

ஆரம்பத்தில் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே பேசிக்கொண்டிருந்த இருவரும், அதன் பிறகு வெளிநாட்டு நிகழ்ச்சிகள், தனிப்பட்ட சந்திப்புகள், ரகசிய டின்னர்கள் என அடிக்கடி ஒன்றாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதை ஆரம்பத்தில் படக்குழுவினர் சாதாரண நட்பாகவே எடுத்துக் கொண்டாலும், காலப்போக்கில் அந்த நெருக்கம் அதிகரித்ததாக சினிமா வட்டாரங்களில் பேச்சு ஓடுகிறது.

Advertisement

அதிலும் அந்த நடிகையின் நெஞ்சுப் பகுதியில் இருக்கும் டாட்டூவுக்குப் பின்னால் இருக்கும் கதையை இணைத்து பலரும் பேச ஆரம்பித்துள்ளனர். அந்த டாட்டூ, நடிகர் மீதான தனது ஆழமான பாசத்தின் அடையாளம் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லையென்றாலும், இந்த பேச்சுதான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ரகசிய மீட்டிங்: இருவரும் அடிக்கடி போனில் பேசுவதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களிலும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடிகரின் குடும்ப வாழ்க்கையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. குறிப்பாக, நடிகரின் மனைவி இந்த நெருக்கம் குறித்து பலமுறை கேள்வி எழுப்பியதாகவும், அதனால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறுவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement

வீட்டில் பிரச்னை: இதையடுத்து, நடிகர் தனது மனைவியிடம் இது வெறும் நட்பு மட்டும்தான் என்று விளக்கம் அளித்ததாகவும், ஆனால் அதை குடும்பத்தினர் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுபுறம், நடிகையும் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல் தனது படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

ஓவர் புகைச்சல்: ஆனால், டாட்டூவாக நடிகையின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர், நான்-ஸ்டாப் ரிலேஷன்ஷிப், மனைவியின் அதிருப்தி என மூன்று விஷயங்களும் சேர்ந்து தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.