சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் சமீபத்தில் வெளிநாட்டில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், படங்கள் குறித்து பேசுவார்கள் என்று நினைத்த நடிகைக்கு எதிர்பாராத அனுபவம் காத்திருந்ததாம்.

Advertisement

நிகழ்ச்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, ரசிகர்கள் அனைவரும் ஒரே நடிகரைப் பற்றியே தொடர்ந்து கேள்வி கேட்க ஆரம்பித்தார்களாம். "அவர் எப்படி இருக்கிறார்?", "எப்போது மீண்டும் உங்களுடன் சேர்ந்து பார்க்க முடியும்?", "அவரைப் பற்றி ஏதாவது சொல்லுங்கள்" என அடுத்தடுத்து வந்த கேள்விகளால் நடிகை ஒரு கட்டத்தில் தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டாராம்.

Advertisement

முதலில் புன்னகையுடன் சமாளிக்க முயன்றாலும், கேள்விகள் நிற்காமல் தொடர்ந்து வந்ததால், எந்த பதிலும் சொல்லாமல் சிரித்தபடியே வேறு விஷயத்திற்கு பேச்சை மாற்றியிருக்கிறாராம். அதன்பிறகும் ரசிகர்கள் விடாமல் அதே விஷயத்தை எழுப்பியதால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே குறுக்கிட்டு அடுத்த நிகழ்வுக்கு நகர்த்தியதாக சொல்லப்படுகிறது.

வருத்தப்படுகிறாரா நடிகை?: இந்த சம்பவத்துக்குப் பிறகு, "ஒரு நடிகையாக நான் சென்ற இடத்திலும், என் படங்களை விட வேறு விஷயங்கள்தான் பேசப்படுகின்றன" என்று தனது நெருங்கிய வட்டாரத்தில் நடிகை வருத்தப்பட்டதாகவும் தகவல். மேலும் நடிகைக்கு இதுபோன்ற விஷயங்கள் பிடிக்காது என்றும் கூறப்படுகிறது. என்னதான் நடிகையும் நடிகரும் நல்ல நண்பர்கள் என்றாலும் அவர்கள் குறித்து பொதுவெளியில் பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்ற வகையில் ஏதேதோ பேசுவதால் ரசிகர்கள் மத்தியில் இருந்து இவ்வாறு கேள்விகள் வருவதை நடிகை விரும்புவதில்லையாம்.

Advertisement

அரசியல் நோக்கத்தில் நடிகை: அதே நேரத்தில், இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், ரசிகர்கள் மீண்டும் பழைய பேச்சுகளை கிளப்ப ஆரம்பித்துவிட்டார்களாம். இதனால், சம்பந்தப்பட்ட இருவரும் அமைதியாக இருந்தாலும், ரசிகர்களே இந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்து வருகிறார்கள் என்பதே கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசுகிசுவாக பேசப்படுகிறது. மேலும் நடிகை விரைவிலேயே அரசியலில் கவனம் செலுத்தப்போவதாகவும், அதனால் தான் நடிகை சமீபமாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்ற பேச்சும் அடிபடுகிறது.