சென்னை: தென்னிந்தியத் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டிப் பறக்கும் அந்த டாப் நடிகையின் பெயரைச் சுற்றி சர்ச்சைகளுக்கு என்றைக்குமே பஞ்சமிருந்ததில்லை. பாத்ரூம் வீடியோ லீக் முதல், கைநழுவிப்போன நிச்சயதார்த்தம் வரை இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருப்பது என தொடர்ந்து செய்திகளில் அடிபடும் அந்த நடிகை, சமீபகாலமாகத் இந்த மாஸ் நடிகருடன் இணைத்து பேசப்பட்டு வருகிறார்.
அந்த முன்னணி நடிகர் தனியாக புதிய அரசியல் கட்சி தொடங்கி மாஸ் காட்டிய அதே நேரத்தில் தான், அவரது மனைவி விவாகரத்து மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, வதந்திகளுக்கு மேலும் உரம் போடுவது போல விழா ஒன்றில், நடிகை முன்வரிசையில் அமர்ந்து மீண்டும் சிக்கலை உருவாக்கினார். இது போதாக்குறைக்கு, நடிகரின் பிறந்தநாளுக்கு நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் வெட்டிய புகைப்படத்தைப் பகிர்ந்து ஒட்டுமொத்த இணையத்தையே அலறவிட்டார்.
வெளிநாட்டில் நடந்த அந்த சம்பவம்: கடந்த சில நாட்களாக இவர்களைப் பற்றிய பேச்சுகள் கொஞ்சம் அடங்கியிருந்த நிலையில், நடிகை வெளிநாட்டுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். அங்கே திரண்டிருந்த ரசிகர்கள் நடிகையைப் பார்த்து, அந்த நடிகரை கேட்டதா சொல்லுங்க... அவருக்கு வாழ்த்து சொல்லுங்க என கூட்டத்தில் கத்தினார்கள். அதைக் கேட்டு கொஞ்சம் கூட பதற்றமடையாத நடிகை, எதைப் பற்றியும் பேசாமல் ஒரு சின்னச் சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அங்கிருந்து நைஸாகக் கிளம்பிவிட்டார். எது பேசினாலும் தேவையில்லாத சலசலப்பை உண்டாக்கும் என்பதால், தற்போது அந்த நடிகரைப் பற்றிப் பேசுவதையே அவர் முற்றிலுமாகத் தவிர்த்து வருகிறார். திடீரென பல்டி அடித்த பிரபலம்: மற்றொரு பக்கம், அந்த நடிகரும் நடிகையைத் தவிர்த்து வருகிறார். இதுகுறித்து அந்த பல்க் ஆசாமி, யூடியூப் பக்கத்தில், அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் தான், அவங்களுக்குள்ள எந்தத் தவறான உறவும் இல்லை... சோசியல் மீடியாதான் இதை ஊதி ஊதிப் பெருசாக்குது என அதிரடியாகப் பல்டி அடித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், என்னய்யா... பல கோடி கைமாறிடுச்சா? இல்ல ஊமைக்குத்தாகக் குத்திட்டாங்களா?" என கமெண்ட்களில் கலாய்த்து வருகின்றனர்.More Articles